தேவகோட்டை கவிஞர் தமிழ்க் குமரப்பன் 16- ஆம் ஆண்டு நினைவு மற்றும்
காரைக்குடி தோழர் சி.முருகன் முதலாம் ஆண்டு நினைவு சிறுகதைப் போட்டி
குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் இடை நிற்றல் மாணவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், எதிர்பார்ப்புகள்
விதிமுறைகள்
சிறுகதைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்
சிறுகதைகள் யாவும் சமூகநோக்கம், நற்சிந்தனை உள்ளதாக இருக்க வேண்டும்.
சிறுகதைகள் A4 தாளில் பின்பக்கம் எழுதாமல் ஒரு பக்கம் மட்டும் எழுதியோ அல்லது தட்டச்சு செய்தோ 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்குமாறு அனுப்ப வேண்டும்.
அரசியல், தனி நபர் சாடல், ஒரு கட்சி சார்பு அல்லாததாக இருக்க வேண்டும்.
இப்போட்டிக்கு வயதுக் கட்டுப்பாடு கிடையாது.
நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
சிறுகதைகளை அஞ்சல் வழியில் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியர் அனுப்ப கூடாது.
சிறுகதை ஆசிரியர் தமது பெயர், முகவரி, அஞ்சல் குறியீட்டு எண், தொடர்பு எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
போட்டியாளர் தம் சுய விவரக் குறிப்புடன் , தம் ஒளிப்படத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
கதைகள் எனது சொந்தக் கற்பனையில் உருவான புனைவுகளே,
அவை தழுவலோ, மொழிபெயர்ப்போ, பிறிதொன்றின் நகலோ அல்ல என்ற உறுதிமொழி இணைக்கப்பட வேண்டும்.
முதல் பரிசு: ரூ.2500/-
இரண்டாம் பரிசு: ரூ.2200/-
மூன்றாம் பரிசு: ரூ.2000/-
தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைகள் தொகுத்து புத்தகமாக வெளியிடப்படும்.
தங்கள் சிறுகதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
05-08-2021
விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 7373452769
அனுப்ப வேண்டிய முகவரி:
சண்.மணிபாரதி
வழக்கறிஞர்
சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பாளர்
656, பசுத் தொழு வீதி,
விராமதி-630212,
சிவகங்கை மாவட்டம்.
0 கருத்துகள்