தந்தையின் காதலி

தந்தையின் காதலி
மாக்சிம் கார்க்கி
தமிழில்
தெ.மு.சி. ரகுநாதன்

ஏழைச் சமூகத்தைப்பற்றிக் கதைகள் எழுதும் இன்றைய எழுத்தாளர்கள் ஏழைகளைப் பாமரர்களாகவும், இருகால் பிராணிகளாகவுமே கருதி, அனுதாபத்தோடு எழுத முனைகிறார்கள் எப்படி முதலாளிகள் தொழிலாளிகளை மனிதர்களாகக் சுருதவில்லையோ. அதுபோலவே இந்த எழுத்தாளர்களும் ஏழைகளை மனிதர்களாகக் கருதவில்லை என்பதுதான் உண்மை . ஆனால், ஏழைப்பட்ட மனிதனுக்கு எழுத்தாளனின் இரக்க சிந்தையோ, அனுதாயமோ தேவை இல்லை. எழுத்தாளனைப் போலவே அவனும் ஒரு மனிதன்: சுயநலத்தால் பாழ்பட்டுப்போன ஒழுக்கக்கேடும். பெரிய மனிதர்களின் உணர்ச்சி விகாரங்களும் அவனுக்குக் கிடையாது ஏழையிடமே மனிதருணங்கள் நிரம்பியிருக்கின்றன. ஆனால், அவன் சுதந்திரமற்றுக் கிடக்கிறான். அந்தச் சுதந்திரத்தை அவனுக்கு அளிப்பதற்காக எழுதுபவர்களே முற்போக்குக் கலைஞர்கள், பட்டினிச் சாவைக் கண்டு ஒப்பாரி வைத்து, நம் கண்ணீரை வருவிப்பவன் முற்போக்காளனல்ல; உலகிலுள்ள அத்தனை பேரின் ரத்தக்கண்ணீரையும் துடைத்து, பட்டினிச் சாவைப் போக்க வழிகாட்டும், அந்தப் பாதையில் செல்ல நம்மைத் தூண்டிவிட்டும், தானே முன் சென்றும் நடப்பவனே முற்போக்காளன் இந்த மாதிரியான முற்போக்காளனின் பிரதியிம்பத்தைத்தான் நாம் கார்க்கியின் இலக்கிய சிருஷ்டிகளில் காண்கிறோம் - தொ.மு.சி.ரகுநாதன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்