நன்னன் குடி நடத்தும் மானமிகு இரா செம்மல் நினைவு சிறுகதைப் போட்டி

 நன்னன் குடி நடத்தும் 

மானமிகு  இரா செம்மல் நினைவு சிறுகதைப் போட்டி 


முதற் பரிசு  1௦௦௦௦/-  {பத்தாயிரம்}           

இரண்டாம் பரிசு 5௦௦௦/- {ஐயாயிரம்} 

மூன்றாம் பரிசு 3௦௦௦/- {மூன்றாயிரம்} 

இரண்டு ஆறுதல் பரிசுகள் தலைக்கு 1௦௦௦/-  {ஓராயிரம்}


கீழ்க் காணப் பெறும் விதிமுறைகளுக் கிணங்க 30/04/2021  ஆம் நாளுக்குள் எமக்குக் கிடைக்கப் பெறும் ஐந்து சிறந்த கதைகளுக்கு மேற்காணப் பெறும் ஐந்து  பரிசுகளும் வழங்கப்படும். 


*பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.* 

  இக் குறளின் கருத்து பளிச்சென்று தெரியும்படிக் கதை இருக்க வேண்டும்.

 

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் இடம் பெறக் கூடாது.

 சிறுகதை இலக்கணம், மரபு ஆகியவை நன்கு அமைந்திருக்க வேண்டும்.  


மொழிநடை எளிதாக இருக்கலாம்; ஆனால் அது தமிழாக இருக்க வேண்டும்; பிறமொழி கலப்போ வழுவோ இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும். எழுத்து அடித்தல் திருத்தல் இன்றி தெளிவாக இருக்க வேண்டும்.  மூன்று படிகள் அனுப்ப வேண்டும்.  


படிகளின் அகத்திலோ புறத்திலோ எழுதியவரின் பெயர் போன்றவை குறிப்பாகவும் இடம் பெற்று விடக் கூடாது.  


எழுதியவரின் பெயர், முகவரி, அலைபேசி எண்; புலன எண் போன்றவற்றைத் தனித்தாள் ஒன்றில் எழுதி இணைத்து அனுப்ப வேண்டும். 


படைப்பாளிகளின் புலன எண் வாயிலாக படைப்பு வந்து சேர்ந்தமை அவருக்குத் தெரிவிக்கப்படும்.  

இப் போட்டிகள் பற்றிய பிற எத் தொடர்பும் எம்மோடு கொள்ளற்க.  


போட்டிகளின் முடிவுகள் பற்றிய எந்த உரிமையும் எம்மையன்றி வேறு எவருக்கும் எந்த அளவிலும் இல்லை. 


போட்டிக்கு வந்தவற்றை நூலாக அச்சிட்டு வெளியிடும் உரிமையும் எம்மையே சாரும். 


படைப்புகளைத் திருப்பியனுப்ப இயலாது.


படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

“சிறுகுடி”

22 முதல் தெரு

அரங்கராசபுரம்

சைதாப்பேட்டை

சென்னை 600015

( சைதை நீதிமன்றத்தின் பின்புறம் )

9884550166

9840659157

கருத்துரையிடுக

1 கருத்துகள்