பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பில் கவிதை, கட்டுரை நூல்கள் போட்டி

 உலக அளவிலான தமிழ்க் கவிதை மற்றும் கட்டுரை போட்டி

உலக அளவிலான தமிழ்க் கவிதை மற்றும் கட்டுரை போட்டிக்கு நூல்களை அனுப்பலாம் என பொதிகைக் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதிகைத் தமிழ்ச் சங்கமும், ழகரம் வெளியீடும் இணைந்து முதல் படைப்பாளி களின் நூல்களுக்கான போட்டி நடத்துகின்றன.

இது முதல் படைப் பாளிகளின் கவிதை மற்றும் கட்டுரை நூல்களுக்கான போட்டி, பெண் கவிஞர்களுக்கான கவிதை நூல் போட்டி என இரு பிரிவுகளாக நடத்தப்படும்.

உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கலாம். பரிசுகள் செப்டம் பர் மாதம் திருநெல்வேலியில் நடைபெறும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் ஆறாவது ஆண்டுத் தொடக்க விழாவில் வழங்கப்படும். முதல் படைப்பாளிகளுக்கான போட்டியில் சிறந்த கவிதை, கட்டுரை நூல்களுக்கு தலா ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்று பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும்.

பெண் கவிஞர்களுக்கான சிறப்பு நூல் போட்டியில் கவிதை நூலுக்கு

முதல் பரிசு ரூ.10,000, இரண்டாவது பரிசு ரூ.5,000 மற்றும் நெல்லை ஆ.கணபதி இலக்கிய விருதும், ழகரம் வெளியீடு சார்பில் வழங்கப்படும்.

போட்டிக்கான நூல்கள் 2020 ஆம் ஆண்டில் வெளிவந்ததாகவும், நூலாசிரியரின் முதல் நூலாகவும் இருக்கவேண்டும். நூலின் இரண்டு படிகளை, சுயகுறிப்பு மற்றும் முதல் படைப்பு என்பதற்கான சுயஉறுதி யுடன் கவிஞர் பேரா, தபால் பெட்டி எண்.103, பாளையங்கோட்டை - 627002 என்ற முகவரிக்கு ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பதிவு அஞ்சல் அல்லது தூதஞ்சலில் வரும் நூல்களோ, பதிப்பகங்கள் மூலம் வரும் நூல்களோ ஏற்றுக்கொள்ளப்படாது. நூலாசிரியரே நூல்களை அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு செல்லிடப் பேசி எண். 6379860121-ஐ தொடர்பு கொள்ளலாம்.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்