எழுச்சித் தமிழர் விருது - 2020

 எழுச்சித் தமிழர் விருது - 2020


ழுச்சித் தமிழர் இலக்கிய விருதுகள் (2020)அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த

கவிதைத் தொகுப்பாக கதிர்பாரதியின் 'உயர்திணைப் பறவை'. சிறந்த சிறுகதைத்

தொகுப்பாக அருண்.மோவின் 'அநீதிக் கதைகள், சிறந்த நாவலாக சீனிவாசன்

நடராஜனின் தாளடி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த பெண்ணிய

எழுத்துக்காக தேன்மொழி தாஸ், சிறந்த ஓவியத்திரட்சிக்காக அமுதன் பச்சைமுத்து,

சிறந்த பௌத்தக் கருத்தியல் எழுத்துக்காக க.ஜெயபாலன் ஆகியோர்

தேர்வாகியிருக்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளில் வெளியான மிகச் சிறந்த

அரசியல் கருத்தியல் பனுவலாக தொல். திருமாவளவனின் அமைப்பாய்த் திரள்வோம்

நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21 அன்று மாலை வடபழனியிலுள்ள

புரட்சியாளர் அம்பேத்கர் திடலில் விருது வழங்கும் விழா நடக்கிறது

விருதாளர்களுக்கு செங்கனி.காம் சார்பான பாராட்டுகளும் வாழ்த்துகளும்..


கருத்துரையிடுக

0 கருத்துகள்