நினைவூட்டல் வெட்சி காலாண்டிதழ் : வேண்டுகோள்

2021 ஆண்டிற்கான முதல் பருவ இதழ் ஜனவரி மாத இறுதியில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். ஆய்வுக்கட்டுரைகள், படைப்பிலக்கியங்கள் (கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, சிறார் பாடல்கள்..), நூல் அறிமுகம், மதிப்புரைகளை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். 

ஆய்வுக்கட்டுரைகளில் ஆய்வு அணுகுமுறைகளோடும் கோட்பாட்டு அடிப்படையிலும் புதிய திறப்புகளைக் கொண்டுவரும் தன்மையிலுள்ளனவற்றிக்கு முன்னுரிமை அளிக்கப்பெறும். 

பழங்குடி எழுத்துகள், நாட்டார் மரபு, திருநங்கையர், மாற்றுத்திறனாளி, சூழலியல் போன்ற விளிம்புநிலை எழுத்துகள் ஒவ்வொரு இதழிலும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அவை சார்ந்த படைப்புகள், ஆய்வுகள், உரையாடல்கள் வரவேற்கப்படுகின்றன.

பதிப்புக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும். இதழ் வெளியான பின்னர் வாசகர்கள்,  அறிஞர்கள் இணைந்து மதிப்புரைக்கூட்டங்களில் விவாதித்துச் செப்பம் செய்யப்பட்டு அவை வகைமை அடிப்படையில்  ஆண்டுதோறும் நூலாக்கம் செய்யப்படும். 

படைப்புகளை 02.01.2021க்குள் அனுப்ப வேண்டுகிறோம். காலநீட்டிப்பில்லை.

vetchiidhal@gmail.com

தொடர்புக்கு : 6374663016

கருத்துரையிடுக

0 கருத்துகள்