என் ஊரின் கதை

 என் ஊரின் கதை

உங்கள் ஊரைப் பற்றி எழுதுங்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

உங்கள் ஊரின்... மனிதர்கள், மகத்துவங்கள், சிதைவுகள், போராட்டங்கள், பழக்க வழக்கங்கள்....

உங்கள் ஊரின்... சாலைகள், நீர்நிலைகள், கோயில்கள், வயல்கள், தொழில்கள், பள்ளிக் கூடங்கள், கடை வீதிகள், இடுகாடுகள்...(இவை வந்த வரலாறுகள்)

உங்கள் ஊரின்...வீடுகள், வீதிகள், விலங்குகள், திருமணங்கள், மரணங்கள், கொண்டாட்டங்கள், துயரங்கள்...

என உங்கள் ஊருக்குள் பொதிந்து கிடக்கும் வரலாற்றைப் பதிவு செய்யுங்கள்.


நீங்கள் கவிதை, சிறுகதை எழுத ஆர்வமுள்ளவரா..? இது உங்களுக்குக்கான தளம் 


எல்லாவற்றையும் எழுத வேண்டிய அவசியமில்லை; நீங்கள் தேடி அறிந்ததை எழுதுங்கள்.

மறந்தவற்றை நினைவு கூருங்கள். உங்கள் ஊர் நடந்து வந்த, கடந்து வந்த பாதையை. பயணத்தைச் சொல்லுங்கள்.மறவாதீர்கள்! ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

பள்ளி மாணவர், கல்லூரி மாணவர், பள்ளி ஆசிரியர், பெற்றோர்- என ஆர்வமுள்ளோர் எவரும்

என் ஊரின் கதை"யை எழுதலாம். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைக்குப் பரிசும் பாராட்டும் உண்டு. கட்டுரைகள் அவ்வப்போது www.bookday.co.in இணைய இதழிலும்,  தொகுத்து நூலாகவும் வெளியிடப்படும்.

இது ஓர் ஆய்வுப் பயணம்; பயணத்தில் பங்கெடுங்கள். (கட்டுரையை அனுப்ப இறுதி நாள் - 31.10.2020).

கட்டுரை அனுப்ப வேண்டிய முகவரி:

திருமிகு K.G.புவனேஷ்வரி,

17, ஶ்ரீனிவாச கோபாலன் இல்லம்,

சுபமங்களா அவென்யூ,

பெருமாண்டி பஞ்சாயத்து,

கும்பகோணம்- 612 002.

 94436 78395 / 87784 94475.

குறிப்பு: கட்டுரையை 94436 78395 என்ற எண்ணிற்கு WhatsApp இல் text file ஆக அனுப்பலாம் அல்லது bhuvanaagopalan@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

தோழமையுடன்,

Dr.வே.வசந்தி தேவி, தலைவர்.

ஜெ.கிருஷ்ணமூர்த்தி, செயலர்.

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்-தமிழ்நாடு / புதுச்சேரி.  இணைந்து புக்டே இணைய இதழ் www.booday.co.in

கருத்துரையிடுக

0 கருத்துகள்