யாவரும் பப்ளிஷர்ஸ் வழங்கும் “க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020” – வெற்றியாளர்கள்

தமிழ் எழுத்தாளுமைகளில் முக்கியமானவரான க.நா.சு அவர்களின் நினைவாக சிறுகதைப் போட்டியினை, இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதியன்று அறிவிப்பு செய்திருந்தோம். கொரோனா தொற்று என்கிற கரு கதைகளுக்கான அடிப்படை விதியாக வைக்கப்பட்டது. அதன்படி நல்லதொரு எண்ணிக்கையில் (விதிமுறைக்கு உட்படாத கதைகள் போக) 278 கதைகள் போட்டிக்குத் தேர்வாகின. வந்திருந்த கதைகளிலிருந்து 40 கதைகளாக எமது தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் அடுத்தக் கட்டத்திற்கு சென்றது.

பரிசுக்கான இறுதி பத்து கதைகளை எழுத்தாளர் ஜீ.முருகன் தேர்வு செய்தார். அவருக்கு எங்களது நன்றி.


எழுத்தாளர் ஜீ.முருகன் அவர்களின் தேர்வின்படி க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020-ன் இறுதிப்பட்டியல் இத்துடன் வெளியாகிறது.

இதன்படி – க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டி – 2020ல் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு: (பெயர் வரிசை : ஆங்கில எழுத்துப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது)

கார்த்திக் பாலசுப்ரமணியன்
எம்.கே.குமார்
சுனீல் கிருஷ்ணன்
சுஷில்குமார்
பரிவை சே. குமார்
சு. சரவணன்
வ. கீரா
வால்டர் ராபின்சன்
வேல்விழி
விஜய ராவணன்

வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு எமது பாராட்டுகள். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் விழாவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பரிசுத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட கதைகள் நூலாகத் தொகுக்கப்பட்டு விரைவில் வெளிவரும்.

நன்றி:யாவரும் பதிப்பகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்