கல்கோனா இதழும் பாலைவனப் பாவலர்களும் இணைந்து வழங்கும் கவிதைப் போட்டி

 வாருங்கள்...

உங்களுக்குத் தோன்றும் கவிதைகளை அதிகபட்சம் ஐந்து வரிகளுக்குள் சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதி அனுப்புங்கள். சிறப்பான 10 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 'கல்கோனாஇதழில் வெளியிடப்படும். கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் நூறு ரூபாய் பரிசு உண்டு. அதாவது தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு கவிதைக்கும் ஐநூறு ரூபாய் வீதம் மொத்தம் பத்து பேருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்தப் பரிசுத் தொகையை பாலைவனப் பாவலர்கள் என்றழைக்கப்படும் நண்பர்கள் ஷாஜஹான் ஷேக்முகமதுஃபக்ருதீன் இப்னு ஹம்துன்ஜியாவுதீன் முகமது ஆகியோர் வழங்கவுள்ளார்கள்.

கவிதைகள் உங்கள் சொந்த கற்பனையாக இருக்கவேண்டும்.

ஒருவர் இரண்டு கவிதைக்கு மேல் அனுப்பவேண்டாம்.

கவிதைகளை செப்டம்பர் பத்தாம் தேதிக்குள் kalkonacompetition@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். தேர்வாகும் கவிதைகள் செப்டம்பர் 16 ‘கல்கோனாஇதழில் வெளியாகும். 

வெற்றிபெற வாழ்த்துகள்.





கருத்துரையிடுக

0 கருத்துகள்