வானவில் சிறுகதைகள் - சிறுகதைப் போட்டி

பாரதி திருவிழா - 2020

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை பாரதி திருவிழாவாக வானவில் பண்பாட்டு மையம் 26 ஆண்டுகளாகக் கொண்டாடி வருகிறது. இவ்வாண்டு பாரதி விழாவின் ஒர் அங்கமாக சிறுகதைப் போட்டி நடத்தி விழா நாளில் பரிசுகள் வழங்கப்படும்  என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

பாரதி திருவிழா - 2020

சிறந்த படைப்புகளை அனுப்பியவர்களை கெளரவிக்கும் வகையில் முதல், இரண்டு, மூன்று என்று பரிசுக்கதைகளை வகைப்படுத்தாமல், 5 சிறந்த சிறு கதைகளுக்குத் தலா ரூ.10,000 அளிக்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் 10 சிறுகதைகளுக்குத் தலா ரூ.1000 பரிசாக அளிக்கப்படும்.

15 சிறுகதைகளும் அடங்கிய சிறுகதைத் தொகுப்பு, ”வானவில் சிறுகதைகள்என்ற நூலாக 2020 பாரதி திருவிழாவில் வெளியிடப்படும்.

போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதைகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை விளக்குவதாகவோ, சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்திய ஏதேனும் ஒரு நிகழ்வு குறித்தோ  அமையலாம்.

பாரதியின் பாடல் வரிகளின் பிரதிபலிப்பாக இருந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

உதாரணமாக,

"ஆசைமுகம் மறந்து போச்சே

சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ

ரெளத்திரம் பழகு

ஆன்றோர்கள் தேசமடி

வெந்து தணிந்தது காடு"

விதிகள்:

  • ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்பலாம். 
  • சிறுகதைகள், கணினி அச்சில் 1600 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் நலம். 
  • படைப்புகள் பிறமொழி தழுவலாகவோ, மொழி பெயர்ப்பாகவோ இல்லாமல்  சொந்தப் படைப்பாக இருக்க வேண்டியது அவசியம். 
  • எங்கள் வலைத்தளத்தில்(vanavilculturalcentre.com) கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே கதையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். 
  • பதிவேற்றம் செய்யும் கதையில் எழுதியவர் பெயர், முகவரி இடம்பெறக் கூடாது.
  •  முடிவுகள் வெளியாகும்வரை வேறு இதழுக்கோ இணையதளத்துக்கோ, வலைப்பதிவுகளுக்கோ, இதர போட்டிகளுக்கோ இந்தக் கதையை அனுப்பக்கூடாது. 
  • பரிசுக்குரிய கதைகளை, நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவின்  தீர்ப்பே இறுதியானது.
  •  முடிவு வெளியாகும் வரை, எவ்விதக் கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ கூடாது.

படைப்புகளை சமர்ப்பிக்க

கதைகள் வந்து சேர வேண்டிய கடைசித் தேதி: செப் 30 2020.

வானவில் பண்பாட்டு மையம், சென்னை.

(வானவில் பண்பாட்டு அறக்கட்டளை)

----------------

வானவில் பாரதி விழா சிறுகதைப் போட்டி 2020 பரிசு பெறும் கதைகள்


கருத்துரையிடுக

5 கருத்துகள்