புல்வெளி ஓசை

காற்றும் சில கவிஞர்களும்

மலைப் புல்வெளியில் தேங்கியிருந்த எனக்கு இப்போதுதான் அருவியாகக் கொட்டிவிட நேரம் கிடைத்திருக்கிறது, ஒரு அருவியாக முதன்முறையாக உயிர்ப் பெறுகிறேன். பதினைந்து கவிஞர்களின் படைப்புகளோடு என் பயணத்தைத் தொடர்கிறேன். தட்டான்குழி கவிதைத் தொகுப்பில் எழுதிய ஒரு வழிப் பாதை சிறு கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு இந்த முழுக் கட்டுரையையும் எழுதியிருக்கிறேன்.
அறிவுமதியும், பழநிபாரதியும் என் தாய்வீடு என்றால், தமிழ் அலை இசாக் என் சகோதர வீடு. அந்த வீடுகள் அடையாளப்படுத்திய அண்டை வீட்டுப் படைப்பாளிடம் கண்டதும் கண்டு உணர்ந்ததுமே இந்தத் தொகுப்பு.
இந்தக் கட்டுரைகள் யாவும் படைப்புக் குழும வானொலியில் ஒவ்வொரு வாரமும் உங்களின் காதுகளுக்கு காபி வித் கவிதையாக அறிமுகமானதே. இப்போது புத்தக வடிவமாக உங்களின் பார்வைக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
         - ஆண்டன் பெனி

கருத்துரையிடுக

0 கருத்துகள்