தமிழ் பழகுவோம்

வடமொழி தமிழ்
அகங்காரம் செருக்கு
அக்கிரமம் முறைகேடு
அசலம் உறுப்பு, மலை
அசூயை பொறாமை
அதிபர் தலைவர்
அதிருப்தி மனக்குறை
அதிர்ஷ்டம் ஆகூழ், தற்போது
அத்தியாவசியம் இன்றியமையாதது
அநாவசியம் வேண்டாதது
அநேகம் பல
அந்தரங்கம் மறைபொருள்
அபகரி பறி, கைப்பற்று
அபாயம் இடர்
அபிப்ராயம் கருத்து
அபிஷேகம் திருமுழுக்கு
அபூர்வம் அரிது, அரிய
அமிசம் கூறுபாடு
அயோக்கியன் நேர்மையற்றவன்
அர்த்தநாரி உமைபாகன்
அர்த்த புஷ்டியுள்ள பொருள் செறிந்த
அர்த்தம் பொருள்
அர்த்த ஜாமம் நள்ளிரவு
அர்ப்பணம் படையல்
அலங்காரம் ஒப்பனை
அலட்சியம் புறக்கணிப்பு
அவசரமாக உடனடியாக, விரைவாக
அவஸ்தை நிலை,தொல்லை
அற்பமான கீழான, சிறிய
அற்புதம் புதுமை
அனுபவம் பட்டறிவு
அனுமதி இசைவு
ஆச்சரியம் வியப்பு
ஆக்ஞை ஆணை, கட்டளை
ஆட்சேபணை தடை, மறுப்பு
ஆதி முதல்
ஆபத்து இடர்
ஆமோதித்தல் வழிமொழிதல்
ஆயுதம் கருவி
ஆரம்பம் தொடக்கம்
ஆராதனை வழிபாடு
ஆரோக்கியம் உடல்நலம்
ஆலோசனை அறிவுரை
ஆனந்தம் மகிழ்ச்சி
இஷ்டம் விருப்பம்
இங்கிதம் இனிமை
ஈன ஜன்மம் இழிந்த பிறப்பு
ஈனஸ்வரம் மெலிந்த ஓசை
உக்கிரமான கடுமையான
உபசாரம் முகமன் கூறல்
உபயோகம் பயன்
உதாசீனம் பொருட்படுத்தாமை
உத்தரவாதம் பிணை, பொறுப்பு
உத்தரவு கட்டளை
உல்லாசம் களிப்பு
உற்சாகம் ஊக்கம்
ஐதீகம் சடங்கு, நம்பிக்கை
கர்ப்பக்கிருகம் கருவறை
கர்மம் செயல்
கலாச்சாரம் பண்பாடு
கலாரசனை கலைச்சுவை
கல்யாணம் மணவினை, திருமணம்
கஷ்டம் தொல்லை, துன்பம்
கீதம் பாட்டு, இசை
கீர்த்தி புகழ்
கீர்த்தனை பாமாலை, பாடல்
கோஷம் ஒலி
சகலம் எல்லாம், அனைத்தும்
சகஜம் வழக்கம்
சகி தோழி
சகோதரி உடன் பிறந்தவள்
சங்கடம் இக்கட்டு, தொல்லை
சங்கதி செய்தி
சங்கோஜம் கூச்சம்
சதம் நூறு
சதவீதம் சதமானம், விழுக்காடு
சதா எப்பொழுதும்
சதி சூழ்ச்சி
சத்தம் ஓசை, ஒலி
சந்தானம் மகப்பேறு
சந்தேகம் ஐயம்
சந்தோஷம் மகிழ்ச்சி
சபதம் சூளுரை
சம்சாரம் குடும்பம், மனைவி
சம்பந்தம் தொடர்பு
சம்பவம் நிகழ்ச்சி
சம்பாதி ஈட்டு, பொருளீட்டு
சம்பிரதாயம் மரபு
சம்மதி ஒப்புக்கொள்
சரணாகதி அடைக்கலம்
சரித்திரம் வரலாறு
சரீரம் உடல்
சருமம் தோல்
சர்வம் எல்லாம்
சாதாரணம் எளிமை, பொதுமை
சாதித்தல் நிறைவேற்றுதல்,விடாது பற்றுதல்
சாதம் சோறு
சாந்தம் அமைதி
சாகசம் துணிவு, பாசாங்கு
சாராமிசம் பொருட்சுருக்கம்
சாயந்திரம் மாலை வேளை, அந்திப் பொழுது
சாவகாசம் விரைவின்மை
சாஸ்திரம் நூல்
சாசுவதம் நிலை
சிகிச்சை மருத்துவம்
சித்திரம் ஓவியம்
சிநேகிதம் நட்பு
சிம்மாசனம் அரியணை
சிரத்தை அக்கறை, கருத்துடைமை
சிரமம் தொல்லை
சின்னம் அடையாளம்
சீக்கிரமாக விரைவாக
சுதந்திரம் தன்னுரிமை, விடுதலை
சுத்தமான தூய்மையான
சுபாவம் இயல்பு
சுலபம் எளிது
சுவாரஸ்யமான சுவையான
சேவை பணி, தொண்டு
சேனாதிபதி படைத்தலைவன்
சௌகர்யம் வசதி, நுகர்நலம்
சௌக்கியம் நலம்
தசம் பத்து
தத்துவம் உண்மை
தம்பதியர் கணவன் மனைவி, இணையர்
தரிசனம் காட்சி
தர்க்கம் வழக்கு
தர்க்க வாதம் வழக்காடல்
தாபம் வேட்கை
திகில் அதிர்ச்சி
திருப்தி நிறைவு
தினசரி நாள்தோறும்
தினம் நாள்
தீர்க்கதரிசி ஆவதறிவார்
துரதிருஷ்டம் பேறின்மை
துரிதம் விரைவு
துரோகம் வஞ்சனை
துவம்சம் அழித்தொழித்தல்,அழித்துத் தொலைத்தல்
தேகம் உடல்
தேசம் நாடு
தைரியம் துணிவு
நட்சத்திரம் விண்மீன், நாள்மீன்
நமஸ்காரம் வணக்கம்
நர்த்தனம் ஆடல்,நடனம், கூத்து
நவீனம் புதுமை
நவீன பாணி புது முறை
நாசம் அழிவு,வீண்
நாசூக்கு நயம்
நாயகன் தலைவன்
நாயகி தலைவி
நிஜம் உண்மை, உள்ளது
நிசபதமான ஒலியற்ற, அமைதியான
நிச்சயம் உறுதி
நிச்சயதார்த்தம் மண உறுதி
நிதானம் பதறாமை
நித்திய பூஜை நாள் வழிபாடு
நிரூபி மெய்ப்பி, நிறுவு
நிருவாகம் மேலாண்மை,
நிதி பொருள், செல்வம், பணம்
நீதி அறம், நெறி, அறநெறி, நடுவுநிலை, நேர்,நேர்நிறை,நேர்பாடு,முறை
பகிரங்கம் வெளிப்படை
பஞ்சாட்சரன் ஐந்தெழுத்து
பரவசம் மெய்மறத்தல்
பராக்கிரமம் வீரம்
பராமரி காப்பாற்று, பேணு
பரிகாசம் இகழ்ச்சிச் சிரிப்பு
பரிசோதனை ஆய்வு
பரீட்சை தேர்வு
பலவந்தமாக வற்புறுத்தி
பலவீனம் மெலிவு, வலிமையின்மை
பலாத்காரம் வன்முறை
பாணம் அம்பு
பாதம் அடி
பாரம் சுமை
பால்யம் இளமை
பிம்பம் நிழலுரு
பிரகாசம் ஒளி, பேரொளி
பிரகாரம் சுற்று
(அதன்)பிரகாரம் (அதன்)படி
பிரசங்கம் சொற்பொழிவு
பிரசுரம் வெளியீடு
பிரச்சினை சிக்கல்
பிரதிநிதி சார்பாளர்
பிரதிபலித்தல் எதிரியக்கம்
பிரத்தியோகம் தனி
பிரபலம் புகழ்
பிரமாதமான பெரிய
பிரமிப்பு திகைப்பு
பிரயோகி கையாளு
பிரயோசனம் பயன்
பிரவாகம் பெருக்கு
பிரவேசம் நுழைவு, புகுதல், வருதல்
பிரார்த்தனை தொழுகை
பிரியம் விருப்பம்
பிரேமை அன்பு
பீடிகை முன்னுரை
புண்ணியம் நல்வினை
புத்தி அறிவு
புத்திரன் புதல்வன்
புனிதமான தூய
புஷ்பம் மலர், பூ
புஜபலம் தோள்வன்மை
பூஜை வழிபாடு
பூர்த்தி நிறைவு
பூஷணம் அணிகலம்
போதனை கற்பித்தல்
மகான் பெரியவர்
மகாயுத்தம் பெரும்போர்
மத்தியஸ்தர் உடன்படுத்துபவர்
மத்தியானம் நண்பகல்
மந்திரி அமைச்சர்
மனசு உள்ளம்
மனிதாபிமானம் மக்கட்பற்று
மானசீகம் கற்பனை
மல்யுத்தம் மற்போர்
யந்திரம் பொறி
யூகம் உய்த்துணர்தல்
யூகி உய்த்துணர்
யோக்யதை தகுதி
ரதம் தேர்
ரத சாரதி தேரோட்டி
ராணி அரசி
ராத்திரி இரவு
ராச்சியம் நாடு, மாநிலம்
ராஜா மன்னன்
ரசம் சாறு, சுவை
லட்சம் நூறாயிரம்
லட்சணம் அழகு
லட்சியம் குறிக்கோள்
வதம் அழித்தல்
வதனம் முகம்
வம்சம் கால்வழி
வஸ்திரம் துணி,ஆடை
வாஞ்சை பற்று
வாயு காற்று
விக்கிரகம் வழிபாட்டுருவம்
விசாரம் கவலை
விசாலமான அகன்ற
விசித்திரம் வேடிக்கை
விஷேசம் சிறப்பு
விஞ்ஞானம் அறிவியல்
விஷயம் செய்தி
விதானம் மேற்கட்டி
விநாடி நொடி
வித்தியாசம் வேறுபாடு
விபூதி திருநீறு, பெருமை
விமோசனம் விடுபடுதல்
வியாதி நோய்
விரதம் நோன்பு
விவாகம் திருமணம்
விவாதி வழக்காடு
வேகம் விரைவு
வேதம் மறை
வேதவிற்பனன்ர் மறைவல்லார்
வேதியர் மறையவர்
ஜனநாயகம் குடியாட்சி
ஜனம் மாந்தர்,மக்கள்
ஜனனம் பிறப்பு
ஜாதகம் பிறப்புக் குறிப்பு
ஜூரம் காய்ச்சல்
ஜோதி ஒளி
ஜோடி இணை
ஸந்ததி கால்வழி
ஸமத்துவம் ஒரு நிகர்
ஸமரசம் வேறுபாடின்மை
ஸமீபம் அண்மை
ஸம்ஹாரம் அழிவு
ஸோபை பொலிவு
ஸௌந்தர்யம் பேரழகு
ஸ்தாபனம் நிறுவனம்
ஸ்தானம் இடம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்