அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்

“அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்”

 ஆசிரியர் : இரா.மதிபாலா 

வெளியீடு:தேநீர் பதிப்பகம்



வாசகர்களை வரவேற்கும் அட்டைப்படத்தை 
மிக நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள்
சலிப்பு வராதவாறு மிக நுணுக்கமாக கவிதைகளை வரிசைப்படுத்தியிருக்கிறார்கள்.

நவீன கவிதைகளில் தன் அனுபவங்களை மிகைப்படுத்தாமல் கூறியிருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு கவிதைகளின் தலைப்புகள் நம்மை கவிதைக்குள் மூழ்க செய்கிறது ரசிக்க வேண்டிய கவிதைகளும் யோசிக்க வேண்டிய கவிதைகளும் நிறைந்திருக்கிறது.

கவிதைகள் எதார்த்த வாழ்வின் வலிகளையும் அதன் வழி பயணிக்கும் வாழ்வியல் சார்ந்த கவிதைகள் இன்னும் சில இருந்திருந்தால் மேலும் சிறப்பு சேர்த்திருக்கும்.
வளரும் கவிஞர் வாசகர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

என்னை மிகவும் கவர்ந்த கவிதை வரிகள் :

மௌனக் கண்கள்


தான்
வந்து அமர்ந்து போனதற்கு
அடையாளமாய்
சிறகில் ஒன்றை
விட்டு விட்டுப் போனது
பறவை.



சிறகு
மென் காற்றில்
உழன்றாடி, உழன்றாடி
அறையின்
தனிமை தூசியை
துடைக்கத் தொடங்கியது.



நீலம் பெருக
வாஞ்சையோடு
பார்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த
முதிய கண்கள்.

வாழ்த்துகள்: இரா. மதிபாலா அண்ணா
புத்தகம் வாங்க : தேநீர் பதிப்பகம், தொடர்பு எண் : 9080909600

கருத்துரையிடுக

0 கருத்துகள்