எழுத்தாளர் ப.சிங்காரம் குறுநாவல்போட்டி முடிவுகள் அறிவிப்பு
நவீன தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளி ப.சிங்காரத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அவர் நினைவாக நமது செங்காந்தள் சோழன் பதிப்பகம் ஓர் குறுநாவல் போட்டிக்கு அழைப்பு விடுத்தது. பேரார்வத்தோடு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்ப் படைப்பாளிகள் 48 படைப்புக்களை அனுப்பி வைத்தனர்.
அவற்றை முறையே எழுத்தாளர், பேராசிரியர், இலக்கிய திறனாய்வாளர் என மூன்று பேர் கொண்ட குழு ஆய்ந்து தேர்வு செய்து 3 படைப்புக்களை வெற்றிபெற்ற படைப்புக்களாக தேர்வு செய்துள்ளன. அதன் விபரங்களை உங்களுடன் தற்போது பகிர்வதில் அகம் மகிழ்கிறோம்.
*விட்டு விடுதலையாகி - சசிகலா தளபதி விஜயராஜா ( திருப்பூர்)
*சருகின் ஓசை - நேசா ( சென்னை)
* வயலோடு விளையாடி - ஐரேனிபுரம் பால் ராசையா ( கேரளம்)
ஆகிய மூன்று குறுநாவல்களும் ப.சிங்காரம் நினைவு குறுநாவல்போட்டியில் வெற்றிபெற்ற படைப்புக்களாக அறிவிக்கப்படுகின்றன.
0 கருத்துகள்