'கதம்பம்' சிறுகதை போட்டி - ஏப்ரல் 2022

வலஞ்சுழி இணையதளம் நடத்தும்

 'கதம்பம்' சிறுகதை போட்டி - ஏப்ரல் 2022


கதம்பம் போட்டியில் பங்கேற்க விரும்பும் எழுத்தாளர்கள் உங்களின் படைப்பை editor@valanchuli.com மின்னஞ்சலுக்கு எழுத்துரு (WORD DOCUMENT) வடிவில் அனுப்ப வேண்டும். படைப்பை மின்னஞ்சலில் அனுப்பும் போது உங்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் அனுப்பவும்.  (உங்களின் கதை தேர்ந்தெடுக்கப்பட்டால் நீங்கள் கொடுக்கும் தொடர்பு முகவரி மூலம் தான் தகவல் அனுப்பப்படும்.)

மின்னஞ்சலில் நீங்கள் அனுப்பும் கதைகள் நம்  தளத்தில் பதிவிடப்படும், நம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள உங்களின் சிறுகதை லிங்கை உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுப்புவோம், அந்த லிங்கை  உங்களின் நண்பர்களோடும், சோசியல் மீடியா பக்கத்திலும் பகிர்ந்து கொள்ளலாம், அதன் மூலம் உங்களின் கதை பலருக்கு சென்றடையும்.

போட்டியில் பங்கேற்கும் சிறந்த சிறுகதைகளை  ஆடியோவாக மாற்றி நம் தளத்தில்  பதிவிடப்படும் .

போட்டிக்கான விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போட்டி விபரங்கள்:

1. சிறுகதை எதை பற்றியும் இருக்கலாம்.
2. ஒருவர் எத்தனை கதை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
3. சிறுகதை 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. கதைகள் சொந்த படைப்பாகவும், இதுவரை வேறு எந்த தளங்களிலும் பதிக்கபடாததாகவும் இருக்க வேண்டும்.
5. கதையை யூனிகோட் வடிவத்தில் (WORD.DOC) மட்டுமே அனுப்ப வேண்டும். (கையால் எழுதி போட்டோ எடுத்து அனுப்புவதோ, PDFல் அனுப்புவதோ கூடாது.
6. தேர்ந்தெடுக்கப்படும் மூன்று சிறந்த சிறுகதைகளுக்கு தலா 500 ரூபாய் பரிசுதொகையும், மூன்று சிறந்த சிறுகதைகளுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்படும்.போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் இணைய சான்றிதழ் வழங்கப்படும்.
7. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் வலஞ்சுழி (valanchuli.com)
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
8. சிறந்த சிறுகதைகள் ஆடியோ கதைகளாக மாற்றப்படும்.
9. அதிக கமென்ட், லைக் பெறும் படைப்புகளுக்கு தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படும்.
10. நடுவர் தீர்ப்பே இறுதியானது.

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி : 10 மே 2022

படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@valanchuli.com







குறிப்பு: போட்டி அறிவிப்பில் "நம்", "நமது" என்பது வலஞ்சுழி இணையத்தளத்தையே குறிக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்