புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் அறிவிக்கும் நூல் போட்டி

 நூல் போட்டி அறிவிப்பு 



புதுச்சேரிப் படைப்பாளர்  இயக்கம் 

அறிவிக்கும் 

நூல் போட்டி 


தமிழ் நூலாசிரியர்கள்  கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள் 

              ------


புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் வரும் 2022ஆம் ஆண்டு,  சனவரித் திங்கள் தமது 13ஆம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாட உள்ளது. அவ்விழாவை முன்னிட்டுப் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பாவலர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் கீழ்க் காணும் தமிழ் நூல் போட்டிகளை அறிவிக்கின்றது:


1) மரபுப் பா நூல் 


2) புதுப்பா நூல் 


3) துளிப்பா நூல் 


4) சிறுவர் பாடல் நூல் 


5) சிறுவர் சிறுகதை நூல் 


6) சிறுகதை நூல் 


7) புதினம் 




கட்டுப்பாடுகள் :

==============


1. போட்டியில் எந்தப் பகுதியைச் சேர்ந்த தமிழ் நூலாசிரியர்கள் எவரும்  கலந்து கொள்ளலாம். வயது வரம்பும் இல்லை.


2. போட்டிக்கு அனுப்பப்படும் நூல்கள் 2019, 2020, 2021 இந்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏதேனும் ஒரு ஆண்டில் வெளியிடப் பட்டிருக்க வேண்டும்.


3. போட்டிக்கு அனுப்பப்படும் நூல்,  உள்ளடக்கம் மட்டும்  (முன்னுரை, வாழ்த்துரை, அணிந்துரை போன்ற பகுதிகள் தவிர்த்து)  60 பக்கங்களுக்குக் குறையாமல்  இருக்க வேண்டும்.


4. போட்டிக்கு 3 (மூன்று) நூல் படிகள் அனுப்ப வேண்டும். 


5. போட்டிக்கு அனுப்பப்படும் நூல்கள் சொந்தமாக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும். மொழி மாற்றம் செய்யப்பட்டதாக இருக்கக் கூடாது. 


6. போட்டிக்கு அனுப்பப்படும் நூல்கள்  எக்காரணத்தைக் கொண்டும் திரும்ப அனுப்பப் படா.


7. நூலாசிரியர்கள் போட்டிக்கு அனுப்பப்படும் நூல்களின் முதல் பக்கத்தில்   "புதுச்சேரிப் படைப்பாளர் இயக்க  நூல் போட்டிக்கான  நூல்" என எழுதிக் கையொப்பம் இடவேண்டும்.


8. ஒவ்வொரு வகைப் போட்டியிலும் சிறந்த மூன்று (3) நூல்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு நூலுக்கு ரூ.1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) என மொத்தம் ரூ.3000 பரிசு வழங்கப்படும். ஆக மொத்தம் ஏழு வகைப் போட்டியிலும் ரூ 21000/- பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது.


9. நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் : 09.01.2022 (ஞாயிற்றுக்கிழமை)


10. அனுப்ப வேண்டிய முகவரி :

பாவலர் ஆறு செல்வன் 

எண் 4, காமராசர் தெரு 

வி.பி.சிங் நகர், 

சண்முகா புரம், 

புதுச்சேரி - 605 009

அலைப் பேசி எண்கள்  : 9894755985 / 7904235300


11. ஒருவரே எத்தனைப் போட்டியிலும் கலந்து கொள்ளலாம்.


12. நூலாசிரியர்கள், நூல்களுடன் தங்களது பெயர், முழு முகவரி,  தொடர்பு எண் ஆகிய விவரங்களுடன்,  நூல் எந்த வகைப் போட்டிக்கு அனுப்பப் பட்டது என்பதையும் குறிப்பிட்டு ஒரு இணைப்புக் கடிதத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.


13. கடைசி நாளுக்குப் பிறகு வரும் நூல்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப் படா.


14. பரிசளிப்பு விழா வரும் 22.01.2022 (காரிக்கிழமை - சனிக்கிழமை - மாலை) (தோராயமாக )


15. கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நூல்களே தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.


16. தேர்வுக் குழுவின் முடிவே  போட்டியில் இறுதியானது.


17. போட்டி தொடர்பாக தனிப்பட்ட வேண்டுகோள்கள் / முறையீடுகள் ஏற்றுக்கொள்ளப்படாது .


18. மேலும் விவரங்கள் அறிய 9894755985 / 7904235300 (ஆறு செல்வன் ) என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்