துரை.நீலகண்டன் எழுதிய “தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல்”

துரை.நீலகண்டன் எழுதிய “தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல்”

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-09-2021) பேராவூரணியில் மருத்துவர் எழுத்தாளர் கவிஞர் என பன்முகம் கொண்ட துரை.நீலகண்டன் எழுதிய “தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல்” கவிதைத்தொகுப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது.

துரை.நீலகண்டன் எழுதிய “தொடர் பயணத்தில் சிறு இளைப்பாறல்” கவிதைத்தொகுப்பு விழா தோழர் ஆறு.நீலகண்டன் (ஒருங்கிணைப்பாளர் தி.பேரவை) அவர்களின் தலைமையில் மிகப் சிறப்பாக நடைப்பெற்றது. வரவேற்புரை தோழர்.த.பழனிவேலு அவர்களும், திரு.மா.கோவிந்தராசு (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்) தோழர் அ.சி.சின்னப்பத்தமிழர் (தலைவர் தமிழ்வழிக் கல்வி இயக்கம்),மருத்துவர் மு.மாரியப்பன் (தலைவர் ஐ.எம்.ஏ. தமிழ் மருத்துவக்குழு அவர்களின் முன்னிலை வகித்தனர்.

திரு.நா.அசோக்குமார் (சட்ட மன்ற தலைவர்) அவர்கள் சிறப்புரையாற்றி நூல் வெளியிட மருத்துவர்.மு.குலாம் மொகிதீன் (பேராசிரியர் எலும்பு அறுவை மருத்துவத்துறை) அவர்கள் பெற்றுக்கொண்டார். விழாவின் இறுதியில் கவிஞர் பாடலாசிரியர் அறிவுமதி பேருரையாற்றி சிறப்பித்தார். ஏற்புரை மருத்துவர் துரை.நீலகண்டன் நூலாசிரியரும்,திரு.புவனேஸ்வரி நீலகண்டன் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.
கருத்துரையிடுக

0 கருத்துகள்