காமன்வெல்த் சிறுகதைப் போட்டி 2022

 

காமன்வெல்த் சிறுகதைப் போட்டி  2022 

காமன்வெல்த் சிறுகதைப் பரிசு 2022 அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது பிற மொழிகளில் எழுதப்பட்ட, இதுவரை எங்கும் வெளிவராத உங்களுடைய சிறுகதைகளை (2000 முதல் 5000 சொற்கள்) இந்தப் போட்டிக்கு அனுப்பலாம், ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்ட கதைகளையும் அனுப்பலாம். ஐந்து வெவ்வேறு காமன்வெல்த் பகுதிகளிலிருந்து ஐந்து கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு £2500 (சுமார் ரூ 2.5 லட்சம்) பரிசு பெறும். இவற்றுள் சிறந்த ஒரு கதைக்கு £5000 (சுமார் ரூ 5 லட்சம்) வழங்கப்படும்.

பரிசுத் தொகை ஒருபுறமிருக்க, காமன்வெல்த் சிறுகதைப் பரிசு என்பது உங்களுக்கு மிகப் பெரிய பெருமையைக் கொண்டுவரும். பல நாடுகளைச் சேர்ந்த வாசகர்கள் உங்கள் கதையைப் படிப்பதற்கான வாய்ப்பை இது உருவாக்கும்.

இந்தப் போட்டியில் பங்கு பெற விரும்புகிறவர்கள் இங்கு க்ளிக் செய்து உங்கள் கதைகளை அனுப்புங்கள். நவம்பர் 30ம் தேதிக்குள் உங்கள் கதைகளை அனுப்பவேண்டும். வெற்றிக்கு வாழ்த்துகள்.


நன்றி : எழுதுவோம்.காம் கருத்துரையிடுக

2 கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. 2022 நவம்பர் வரைக்கும் நாள் இருக்கா இல்ல 2021 நவம்பரா தெளிவு படுத்துங்க

    பதிலளிநீக்கு