சஹானா சிறுகதைப் போட்டி 2021

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021

சஹானா இணைய இதழ்(www.sahanamag.com) & ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் இணைந்து நடத்தும் 

‘சிறுகதைப் போட்டி 2021’


Rs.4000 மதிப்புள்ள Madhura Boutique வழங்கும் பரிசுகள், 

'சஹானா' இணைய இதழின் மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்

சிறந்த 10 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் வெளியீடாக,  அச்சு புத்தகமாக வெளியிடப்படும்


பரிசுகள்

  1. முதல் பரிசு - Rs. 2000 மதிப்புள்ள பரிசு .

  2. இரண்டாம் பரிசு - Rs. 1000 மதிப்புள்ள பரிசு.

  3. சிறந்த வாசகருக்கான பரிசு - Rs. 500 Gift Voucher

  4. சிறந்த வாசகருக்கான பரிசு - Rs. 500 Gift Voucher.

  5. மேற்சொன்ன பரிசுகள் தவிர, சிறுகதைத் தொகுப்பு புத்தகத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த பத்து கதைகள் எழுதிய எழுத்தாளர்களுக்கு, புத்தகத்தின் ஒரு பிரதி, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

  6. போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் (eCertificate) வழங்கப்படும்.


போட்டி முடிவுகள்

நவம்பர் 4, 2021 - தீபாவளி தினத்தன்று, சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியிடப்படும்.


விதிமுறைகள் 

  • சிறுகதைகள், குறைந்தபட்சம் 1500 வார்த்தைகள், அதிகபட்சம்  2500 வார்த்தைகள் இருக்கலாம். இந்த விதிமுறைக்குள் வராத கதைகள் சஹானா இதழில் பிரசுரிக்கப்படும், ஆனால் சிறுகதைப் போட்டியில் சேர்த்துக் கொள்ள படமாட்டாது .
  • ஒருவர் அதிகபட்சமாக, மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.
  • கதைகளை Word Document Formatல், Arial Unicode MS Font உபயோகித்து அனுப்ப வேண்டும்.

உறுதிமொழி

 “இது எனது சொந்த படைப்பு தான் எனவும், இதுவரை அச்சு இதழிலோ, இணையத்திலோ (Facebook, Blog, eMagazines, Amazon, Whatsapp, Instagram etc...), வெளியிடப்படவில்லை என உறுதியளிக்கிறேன். அதோடு, போட்டி முடிவுகள் வெளியாகும் வரை எதிலும் வெளியிட மாட்டேன் என உறுதியளிக்கிறேன். அச்சு புத்தகத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், புத்தகம் வெளியாகி மூன்று மாதங்களுக்கு அச்சு இதழிலோ, இணையத்திலோ, வேறு எதிலும் வெளியிட மாட்டேன் எனவும் உறுதியளிக்கறேன்” என்ற உறுதிமொழியை, சிறுகதை அனுப்பும் போது கட்டாயம் உங்கள் மின்னஞ்சலில் சேர்க்க வேண்டும்.

கதைக்கரு

  • குடும்பம், காதல், உறவுகள், திரில்லர், பேன்டஸி, அறிவியல் புனைவு, சிறுவர்களுக்கான கதை என எதைப் பற்றி வேண்டுமானாலும் உங்கள் கதைகள் இருக்கலாம்.
  • தனிமனித தாக்குதல், அரசியல் காழ்ப்புணர்வு, ஜாதி மத துவேசம், பாலியல் சார்ந்த கதைகளை தவிர்க்கவும்.

கதைகள் அனுப்ப

  • கதைகளை, contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
  • படைப்புகளை அனுப்பும் போது, 'சஹானா சிறுகதைப் போட்டி 2021' என Subject Lineல் குறிப்பிட வேண்டும்.
  • கதைகள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : ஆகஸ்ட் 31, 2021 

கதைகள் தேர்ந்தெடுக்கப்படும் முறை

  • ஆகஸ்ட் 31, 2021 வரை, மின்னஞ்சலில் கதைகள் பெறப்பட்ட வரிசையில், செப்டம்பர் 4 முதல் செப்டம்பர் 30 வரை, 'சஹானா' இணைய இதழில் கதைகள் பிரசுரிக்கப்படும் .
  • கதைகள் பிரசுரிக்கப்பட்ட நாள் முதல், அக்டோபர் 31 வரை, அதிகம் வாசிக்கப்பட்ட 20 கதைகளின் சிறுபட்டியல் (Short List) தயாரிக்கப்படும். 
  • அந்த 20 கதைகளில் இருந்து, முதல், இரண்டாம் பரிசு மற்றும் அச்சு புத்தகமாக்கப்படவுள்ள சிறுகதைத் தொகுப்புக்கு உரிய சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்.
  • எழுத்துப் பிழை, சந்திப்பிழை, கருத்துப் பிழைகள் இருப்பின், கதைகள் எடிட் செய்து தளத்தில் வெளியிடப்படும். ஆனால், பிழைகளுக்கு ஏற்ப மதிப்பெண் கணக்கிடப்படும்.

வாசகர்களுக்கான போட்டி

  • ஒரு எழுத்தாளர் அல்லது பத்திரிகையின் வெற்றியில், வாசகர்களின் பங்கு அளப்பரியது. ஆகவே, அவர்களுக்கும் பரிசு தந்து கௌரவிக்க விரும்புகிறோம்
  • போட்டியில் பங்குபெற விரும்பும் வாசகர்கள் போட்டிக்கு தேர்ந்தெடுத்து, 'சஹானா' இதழில் பகிரப்படும் சிறுகதைகளை வாசித்து, உங்கள் விமர்சனங்களை, உங்கள் முகநூல் பக்கத்தில் (Facebook Timeline) பதிய வேண்டும் .
  • விமர்சனம் பதியும் போது, 'சஹானா இணைய இதழ்' (https://www.facebook.com/SahanaOnlineTamilMagazine/) Facebook பக்கத்தை Tag செய்து பதிய வேண்டும்.
  • அதோடு, #சஹானா_சிறுகதைப்போட்டி2021 என்ற Hashtag கட்டாயம் இருத்தல் வேண்டும். இந்த Hashtag கிளிக் செய்து பார்த்தால், உங்கள் விமர்சனம் அதில் இருக்க வேண்டும். அப்படி இல்லாத விமர்சனங்கள், போட்டி கணக்கில் சேராது. Copy and Paste Hashtag to avoid spelling mistakes  
  • விமர்சனங்கள், குறைந்தது 200 வார்த்தைகள் இருத்தல் வேண்டும்.
  • விமர்சனங்களை,  செப்டம்பர் 4 முதல் அக்டோபர் 31 வரை  Facebookல் பதியலாம். 
  • பதியப்பட்ட விமர்சனங்களில் இருந்து, சிறந்த இரு விமர்சனங்கள், பரிசுக்கு உரியதாய் தேர்ந்தெடுக்கப்படும்.தேர்ந்தெடுக்கப்பட்ட விமர்சனங்கள், சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தில் இடம்பெறும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்