இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்


இலக்கியத்தில் ரசனை என்பது தானாக ருசி பார்த்து ருசி பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று. எத்தனை சொல்லிக் கொடுத்தாலும் வராது பள்ளியில் படிப்பதுபோலப் படித்து மனப்பாடம் பண்ணிக்கொள்வது அல்ல அது.
பல நூல்களைப் படித்துப் படித்து ருசியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
எந்த நூல்களைப் படித்து எப்படி வளர்த்துக்கொள்வது சாத்தியம் என்பது பிரச்னை.
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு என்பது ஒரு வழிகாட்டியாகும்.
டால்ஸ்டாயின் நூல்களைப் படித்துப்படித்து டால்ஸ்டாய் ஆகி விட முடியாது என்பது ஒன்று - டால்ஸ்டாய் ஆக வேண்டுமா என்பது இன்னொன்று.
ஆனால் டால்ஸ்டாயைப் படித்துப் படித்து அன்பு என்னும் சிந்தனையையும் வேறு பல மகோந்நதமான சிந்தனைகளையும் பழக்கப் படுத்திக்கொள்ளலாம்.
ஷேக்ஸ்பியர் என்கிற இலக்கியாசிரியனைப் படித்து மனிதனின் சாதாரணத்தையும் அசாதாரணத்தையும், மேன்மையையும், தாழ்மையையும் புரிந்துகொள்ளலாம்.
டாஸ்டாவ்ஸ்கியின் நாவல்களைப் படித்துப் படித்து மனிதனின் ஆன்மிகத்தின் மேற்போக்கையும் - கீழ்ப்போக்கையும்தான் - உணரலாம்.
இப்படி எத்தனை எத்தனையோ இன்பங்களை இலக்கியத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள் இலக்கியாசிரியர்கள். அவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சுவைக்கக் கற்றுக்கொண்டால் இலக்கிய ரசனை ஏற்பட்டுவிடுகிறது.
-க.நா.சுப்ரமண்யம்
இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்
(சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்)

விலை ₹180

பதிப்பகம் : தேநீர் பதிப்பகம்

பக்கங்கள் : 176

நூல் பெற- 9750856600

(செங்கனி.காம்)

gpay-phonepe -9750856600

கருத்துரையிடுக

0 கருத்துகள்