எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டி அறிவிப்பு - 2021எழுத்தாளர் ராஜகுரு நினைவுச்  சிறுகதைப் போட்டி அறிவிப்பு - 2021 

ராஜகுரு என்கிற புனைபெயரில் சிறுகதைகளும் சரித்திர நாவல்களும் எழுதிய J.ஜெயராமன், தீயணைப்புத் துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. இதில் மாமன்னன் உலா, சோழராணி ஆகிய சரித்திர நாவல்கள் இலக்கிய உலகில் பிரபலமடைந்தவை,கல்கி, கலைமகள், தேவி, மங்கையர் மலர்,குங்குமம் போன்ற வார மாத பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் வெளிவந்துள்ளன.

2011 ஆம் ஆண்டு ராஜகுரு காலமானார்.

2017ஆம் ஆண்டு முதல் பேசும் புதிய சக்தி மாத இதழ் அவருடைய பெயரில்நினைவுச் சிறுகதைப் போட்டி நடத்தி வருகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டியில் பங்கேற்க எழுத்தாளர்களை அன்புடன் வரவேற்கிறோம்.

 நீங்கள் அனுப்பும் சிறுகதை உங்களது சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.

பிறமொழி தழுவலோ. மொழிபெயர்ப்பு கதைகளையோ அனுப்பக்கூடாது.

உங்களது சொந்த கற்பனை என்று உறுதியளிக்க வேண்டும்.

. முழு வெள்ளைத் தாளில் பத்து பக்கங்களுக்குள் கதை இருக்க வேண்டும்.

.தட்டச்சு (DTP) செய்த கதைகளை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

.கதைகளைத் தபாலில் (அ) மின்னஞ்சலில் அனுப்பலாம். Bamini Fonஇல்

அனுப்பக்கூடாது. யூனிகோட் (Uni-code) இல் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி pesumpudhiyasakthi@gmail.com

•போட்டி குறித்த சந்தேகங்களை மின்னஞ்சலில் மட்டுமே கேட்டுக்கொள்ளவேண்டும். தொலைபேசியில் தொடர்புகொள்ள வேண்டாம்.


கதைகள் எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஆகஸ்ட் 15, 2021 அதற்குப் பிறகு போட்டிக்கு வரும் கதைகளை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

யார் வேண்டுமென்றாலும் போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆனால் ஒருவர் ஒரு கதையை மட்டுமே அனுப்ப வேண்டும்.

முதல் பரிசு ரூபாய் 5000/- இரண்டாம் பரிசு ரூபாய் 3000/- மூன்றாம் பரிசு ரூபாய் 2000/-

பிரசுரத்திற்குத் தேர்வு செய்யப்படும் சிறப்பு சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்களை உற்சாகமூட்டும் வகையில் ஓராண்டுக்கு பேசும்புதியசக்தி மாத இதழ் வழங்கப்படும்.

நடுவர் குழுவின் தீர்ப்பு இறுதியானது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் போட்டிக்கு அனுப்பு கதையை முடிவு வெளியாகும் வரை வேறெந்த இதழ்களுக்கும் அனுப்பக்கூடாது 

எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டி 2021 என்று அவசியம் குறிப்பிடவேண்டும்.


முகவரி

எழுத்தாளர் ராஜகுரு நினைவுச் சிறுகதைப் போட்டி 2021

பேசும்புதிய சக்தி மாத இதழ், 

29H, A.N.R.காம்ப்ளெக்ஸ்,

தெற்கு வீதி, திருவாரூர்-610001,

கருத்துரையிடுக

4 கருத்துகள்

  1. சிறிலங்காவில் இருந்து பங்கு பெறலாமா?

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. இப்போட்டிக்கு படைப்புகள் அனுப்பப்படவேண்டிய மின்ஞ்சல் முகவரி ஓரிடத்தில் என்றும் பிறிதோரிடத்தில் என்றும் இருக்கிறதே….. எதுதான் சரியானது?

    பதிலளிநீக்கு