குவிகம் எழுத்தாளர்கள் குழு நடத்தும் நாவல் போட்டி
தமிழ்ப் புத்தாண்டு முதல் (14.04.2021) குவிகம் குறும் புதினம் மாத இதழ் தொடக்க இருக்கிறோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு மாதமும் இரண்டு அல்லது மூன்று குறுநாவல்கள் வெளியாகும்.
அதில் ஒன்றிரண்டு பிரபலமான குறு நாவல்களை உரிய அனுமதியுடன் பிரசுரிக்க உள்ளோம்.
மற்றொன்று எழுத்தாளர்கள் குவிகத்திற்காக எழுதப்பட்ட புதிய படைப்பு!
இந்தப் புதிய குறு நாவல்களைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு பரிசுப் போட்டியும் அமைத்திருக்கிறோம்.
பரிசுகள்:
மூன்று சிறந்த குறு நாவல்களுக்கு Rs.5000/- Rs.3000/- Rs. 2000/-என்று சிறப்புப் பரிசுகள் வழங்க உள்ளோம்.
அவற்றைத் தவிர பிரசுரிக்கப்படும் அனைத்துப் புதிய படைப்புகளுக்கும் சன்மானம் வழங்கப்படும்.
போட்டிக்கான விதிமுறைகள்:
இலக்கியத் தரமிக்க புதிய கதைக்களம் கொண்ட குறு நாவல்களை வாசர்களுக்குத் தருவதே எங்கள் நோக்கம்!
குறு நாவல் 7500 முதல் 9000 சொற்கள் அளவில் இருக்கவேண்டும்
இதுவரை அச்சிலோ இணையதளத்திலோ வெளிவராத படைப்பாக இருக்கவேண்டும்.
சமூகம், சரித்திரம். நகைச்சுவை, பெண்ணியம் போன்ற எந்த வகையிலும் இருக்கலாம்.
ஒருவர் மூன்று படைப்புக்களுக்கு மேல் அனுப்பவேண்டாம்.
ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை குவிகம் குறும் புதினத்தில் பிரசுரிக்கப்பட்ட 12 குறு நாவல்களிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மேலே குறிப்பிட்ட பரிசுத் தொகைகள் வழங்கப்படும் .
ஏப்ரல் 22 புத்தாண்டில் முந்திய வருடத்திற்கான பரிசுகள் வழங்கப்படும்.
படைப்புகள் kurumpudhinam@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு ‘word’ கோப்பாக அனுப்பிவைக்க வேண்டும்.
இந்த ஆண்டுக்கான போட்டிக்கு படைப்புகள் அனுப்பக் கடைசித் தேதி 30/06/2021.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்று போட்டிகள் நடத்தி குறு நாவல்களைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.
குவிகம் குழுவின் முடிவே இறுதியானது.
0 கருத்துகள்