ஸீரோ டிகிரி தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது - 2021



ஸீரோ டிகிரி தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது - 2021


இந்த வருடத்திலிருந்து (2021) ஒவ்வொரு வருடமும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங், தமிழரசி அறக்கட்டளையுடன் சேர்ந்து தமிழில் நாவல் போட்டி நடத்தி தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாவலுக்குப் பரிசு கொடுக்க இருக்கிறது. கூடவே "வாழ்நாள் சாதனையாளர் விருது" ஒன்றும் வழங்கப்படும்.


விதிமுறைகள் :

நாவல் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப அனுமதி

நாவலின் அளவு குறைந்தபட்சம் 30 ஆயிரத்திலிருந்து அதிகபட்சம் 35 ஆயிரம் வார்த்தைகள் வரை இருக்க வேண்டும்.

நாவலை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (word aaல் அனுப்ப வேண்டும்.

கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் (வி) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி zerodegreeaward@gmail.com.

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் செட்டம்பர் 15, 2021 அதற்குப் பிறகு வரும் நாவல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்தப் போட்டி குறித்த எல்லா சந்தேகங்களுக்கும் zerodegreeaward@gmail.com மின்னஞ்சல் வழியாக மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.

உறுதிமொழி

ஏற்கனவே அச்சிலோ, மின்னிதழிலோ, கிண்டில் அல்லது ஆடியோ புக் என எவ்வித வடிவத்திலும் வெளிவராத படைப்பு என்கிற உறுதிமொழி இருத்தல் வேண்டும்.

படைப்பை அனுப்பியதில் இருந்து, போட்டி முடிவு வெளியாகும் வரை அதனை வேறு எந்த இதழுக்கோ, பதிப்பகத்துக்கோ அச்சு வடிவிலோ அல்லது மின்னூலாகவோ அனுப்புவதாக இல்லை என்று உறுதியளிக்க வேண்டும்.

மேலும் படைப்பானது தனது சொந்தக் கற்பனையில் உருவானது என்றும் அது எவ்வித மொழிபெயர்ப்போ அல்லது தழுவவோ அல்ல என்கிற உறுதிமொழியையும் படைப்புடன் இணைத்திருக்க வேண்டும்.


தேர்வும் பரிசும்

வாழ்நாள் சாதனையாளர் விருது' (இலக்கியப் பங்களிப்புக்காக) - ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒருவருக்கு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட 10 நாவல்களின் நெடும்பட்டியல் அக்டோபர் 15ஆம் தேதி வெளியிடப்படும்.

நெடும்பட்டியலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 5 நாவல்களின் குறும்பட்டியல் நவம்பர் 15ஆம் தேதி வெளியிடப்படும்.

இறுதியாக ஒரு நாவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் விருதும் நவம்பரில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும். முதல் பரிசு பெற்ற நாவல் தமிழிலும் - மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்திலும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் வெளியிடப்படும்.

நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. இப்போட்டியில் குறும்பட்டியலில் தேர்ந்தெடுக்கப்படும் 5 நாவல்களையும் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்