கம்பன் எனும் மானுடன்

 காரைக்குடி கம்பன் திருவிழாயின் இரண்டாம் நாள் நிகழ்வு 


காரைக்குடி கம்பன் திருவிழாயின் இரண்டாம் நாள் நிகழ்வில் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கத்தில் கவிஞர் சிறப்பாக கவிதைப் பாடினார்கள்.காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் மூன்று நாள் நிகழ்வாக கம்பன் திருவிழாவை நடத்துகின்றனர்.அதில் இரண்டாம் நாள் திருவிழா 27-03-2021 மாலை நடைப்பெற்றது.அதில் செல்வி .எம்.பிரேமி ,செல்வி எஸ்.ஸ்ரீ லெட்சுமி, செல்வி எஸ்.மகாலெட்சுமி இறை வணக்கமும் அதை தொடர்ந்து கவிஞர் பேச்சாளர் தங்கம் மூர்த்தி அவர்களின் தலைமையில் சுழலும் கவியரங்கம் “கம்பன் எனும் மானுடன்” எனும் தலைப்பில் கவிஞர்.மகாசுந்தர் ,கவிஞர்  தஞ்சை இனியன் ,கவிஞர் முருக பாரதி,கவிஞர் பேச்சாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி,கவிதாயினி சுசித்ரா மாறன் அவர்களும் சிறப்பாக கவிதை பாடினார்கள்.அதனைத் தொடர்ந்து “அறம் வெல்லும்”தலைப்பில் பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேருரையாற்றினார்.


 கம்பன் திருவிழாயின் இரண்டாம் நாள் நிகழ்வின் புகைப்படங்கள் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்