கால்தடம்

 நூல்: கால்தடம்

வகை: சிறுகதை

ஆசிரியர்: சென்றாயகுமார்

பக்கங்கள்: 100

விலை: ₹100 ₹95

பதிப்பகம்: காக்கை பிரதிகள், சென்னை.



விமர்சனம்:
கன்னியாகுமரி மாவட்டத்தின் இளம் பெண் எழுத்தாளர் மலர்வதி எழுதிய தூப்புக்காரி என்ற புதினத்திற்கு பிறகு என்னை மிகவும் தொட்டதும் ,சுட்டதுமான சிறுகதைத் தொகுப்பே தம்பி ."சென்றாய குமார்" எழுதிய "கால்தடம் "என்னும் சிறுகதைத்தொகுப்பு புத்தகம்.
என்னைவிட வயதில் இளையவரான தம்பி. (சென்றாய குமார்) எனக்கு பரிச்சயம் இல்லாதவர்; ஆனால் அவரின் கதைமாந்தர்கள் எனக்கு பரிச்சயமானவர்கள்.
பிறரின் வலிகளையும், வேதனைகளையும் தனது சொந்த வலிகளாக அனுபவிக்க தெரிந்தவனே படைப்பாளி எனும் உச்சத்தை தொட முடியும். இவரின் எழுத்தில் வீரம், வேகம், விவேகம் மினுங்குகின்றது.
தமிழன்னை உங்களை மகவாக ஏற்பதில் மகிழ்ச்சி கொள்வாள்;உயிருள்ளவரை தமிழுலகம் உங்களைப் போற்றும் ;ஏனெனில் சமூகத்தின் அடிநிலை ஆழங்கள் இங்கு குத்தி கிழிக்கப்பட்டிருக்கின்றன.
"தன்னாசி "என்ற சிறுகதைத் தொகுப்பை, பாசத்தின் பிணைப்பாக தத்ரூபமாக படம்பிடித்திருக்கிறார்..
வருண் -இளவேனில் கதைமாந்தர்களை கொண்டு ,"கருப்பை"என்ற சிறுகதை வாயிலாக, தனக்கென வாழ்வது சுயநல அன்பு; பிறருக்கென வாழ்வது பொதுநல அன்பு என்பதை நேரே கூறாமல் மறைமுகமாக அழகாக விளக்குகிறார் ஆசிரியர்...
கோபம் கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்று பகர்கிறார் "காலம் அளித்த பரிசு" என்ற சிறுகதை வாயிலாக....
"ஐந்து விரலும் ஒரே மாதிரி இல்லை' என்னும் சிறுகதைத் தொகுப்பில் நடைபாதை வியாபாரிகள், தள்ளுவண்டி கடைகாரர், பஸ் நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருப்பு, சுக்கு காப்பி ,என இவர் பதிவு செய்திருப்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் இது போன்ற நிகழ்வு நடந்தது உண்டு என்பதை நினைவூட்டியது..
ஜாதி வெறி, மத வெறி, அதிகார வெறி, ஆணவ வெறி பிடித்தவர்களுக்கு சிற்பி என்ற சிறுகதைத் தொகுப்பை செதுக்கி யிருக்கிறார் போலும்....
சந்தோஷமாக வாழவே பணம் ;ஆடம்பரமாக வாழ அல்ல ;என்பதை இவரின் "பழைய செருப்பு" என்ற சிறுகதைத் தொகுப்பு விளக்குவதாக எனக்கு தோன்றுகிறது.
ஏமாற்றும் பெண்கள் உள்ள இந்தப் பாரினில் ..அன்பான, பண்பான ,பொறுப்புள்ள பெண்களும் உண்டு என்பதை "புவி "என்னும் கதாபாத்திரத்தின் வழியாக ஒரு தியாகியின் கதையாக வடிக்கிறார் ஆசிரியர்..
தவறை உணர்த்தி, மன்னிப்பு கேட்க வைக்கிறார் "பூமாரங்" என்ற சிறுகதையில் கவி என்னும் கதைமாந்தர் மூலம்.....
கைக்கு எட்டினது; வாய்க்கு எட்டலியே என்னும் பழமொழியை நினைவுக்கு கொண்டு வருகிறது தொலைக்காட்சி எனும் சிறுகதைத் தொகுப்பு...
Farewell day, school and college memories,friends forever, job, settled என்ற சொல்லாடல்களை "கல்லூரியின் மேல் காதல்"என்னும் சிறுகதை வழியாக விளக்குகிறார்...
தனது மகளுக்கு வந்ததைப் போன்று வேறு யாருக்கும் இதே போன்ற நிகழ்வு நிகழ்ந்து விடக்கூடாது என்பதை நித்திகாவின் தந்தை வழி விழிப்புணர்வு காலத்தின் கட்டாயம் என கூறாமல் கூறுகிறார் ஆசிரியர்....... பாராட்டுக்கள்....
சித்த வைத்தியத்தின் பண்புகளை "சித்த வைத்தியர் சாம்புகன்" என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் அழகாக விளக்குகிறார் ஆசிரியர்....
மொத்தத்தில் ,வட்டார வழக்கில் மொழிநடையை இலாவகமாக கையாண்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது‌.....
தம்பி .."சென்றாய குமார்" உங்களது ,"கால் தடம்" என்னும் சிறுகதைத் தொகுப்பு கண்டிப்பாக வரலாற்றில் கால் தடம் பதிக்கும். தொடர்ந்து எழுதுங்கள் அடித்தட்டு மக்கள் ஏற்றம் பெறும் காலம் வரும் வரை..

அடிமட்டத்தில் உழல்வோர்க்கு கண்டிப்பாக உங்களது புத்தகம் சிறு ஒத்தடமாக இருக்கும்.
                - ரமேஷ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்