'கலைச்செம்மல்' விருது எண்ணிக்கை அதிகரிப்பு

ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளில்,அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கு, 'கலைச்செம்மல்' விருது வழங்கப்படுகிறது. விருது தொகையையும், விருதாளர்கள் எண்ணிக்கையையும் உயர்த்தி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஓவியம் மற்றும் சிற்பக் கலைத் துறைகளின், மரபு வழி மற்றும் நவீன பாணி கலைப் பிரிவுகளில், அரிய சாதனை புரிந்த கலைஞர்களுக்கான, கலைச்செம்மல் விருது தொகை, 50 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். விருதாளர்கள் எண்ணிக்கை, இரண்டில் இருந்து, ஆறாக உயர்த்தப்படும் என, மார்ச், 24ல், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார். அதன்படி, விருது தொகையை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், மரபு வழி மற்றும் நவீன பாணி பிரிவுக்கு, தலா, மூன்று என, விருதாளர்கள் எண்ணிக்கையை, ஆறாக உயர்த்தியும், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்