மாவட்ட மைய நூலகம் வாசகர் வட்டம் சார்பில் "ஞாயிறு போற்று" முதல் வாசகர் வட்ட கூட்டம் "தமிழ்ச் செம்மல்" கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் சொ.சுப்பையா அவர்கள் "என்னை செதுக்கிய நூல்கள் " எனும் தலைப்பில் முதன் முதலில் படித்த புத்தகமாக சுந்தரகாண்டம் மற்றும் ஷேக்ஸ்பியர் நாடகங்கள் இவை இரண்டு புத்தகங்களின் வாசிப்பு திறன்கள் குறித்தும் பேசினார்கள்.தொடர்ந்து பேசுகையில் புத்தகத்தின் விலையை யாராலும் நிர்னயித்துவிட முடியாது.புத்தகம் வாசிப்பவர்களையும் சாதரனமாக நினைத்துவிட முடியாது.கவலைகளை விட்டொலியுங்கள் கலலைப்படுவதால் பிரச்சினைகள் தீராது.மாற்றவே முடியாது என தெரிந்தால் அதோடு போராடாதீர்கள்.பிரச்சினைகளை எதிர்கொள்கிறவர்களே பக்குவப்பட்டவர்களாகிறார்கள்.இந்த நொடி, இந்த நாள் நமக்கானது வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு நிமிடத்தில் அறுபது நொடி உள்ளது,ஒரு மாதத்தில் முப்பது நாட்கள் உள்ளது,ஒரு ஆண்டில் 365 நாட்கள் உள்ளது என்று நினையுங்கள் என்றும் ஒரு நாள் 24 மணி நேரத்தை எப்படி 25 மணி நேரமாக ஆக்கி கொள்வது நேர நிர்வாகம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என விளக்கினார். பங்கு சந்தை வணிகத்தில் "இழப்பீடு நிறுத்த விதி "என்று உள்ளது இதை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிய புத்தகமாக 'வில்லி ஜாலி' எழுதிய IT ONLY TAKES A MINUTE TO CHANGE YOUR LIFE! உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்.
ரூ 180 புத்தகத்தில் 100 கோடி சம்பாதிப்பது என்றில்லாமல் இந்த புத்தகத்திலிருந்து அழகப்பா பல்கலைக்கழகத்தின் தரத்தை A ++ உயர்த்தி 100 கோடி சம்பாதித்தது எப்படி என்று விளக்கினார்கள். சோம வள்ளியப்பன் எழுதிய "இட்டலியாக இருங்கள்" சுவாமி சுகபோதானந்தா எழுதிய "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" போன்ற நூல்களை மேற்கோள்காட்டி நூல்களின் மூலம் தன்னம்பிக்கையோடு போராடி ஒரு கல்வியாளராக,துணை வேந்தராக உயர்ந்து வந்ததையும் அழகப்பா பல்கலைக்கழகத்தை உலகமே வியந்து பார்ப்பதற்கு நூல்களே காரனம் என தன் வாழ்வியலோடு ஒப்பிட்ட இயல்பான உரை வெகு சிறப்பாக இருந்தது.
விழாவில் தமிழக அரசின் "தமிழ்ச்செம்மல்" விருதுபெற்ற கவிஞர் ஜீவி, பேராசிரியர் சா.விஸ்வநாதன், சோ.சாமிநாதன்,எழுத்தாளர் அண்டனூர் சுரா,கவிஞர் சௌவி, "இயலிசை வித்தகர்" ஆலங்குடி வெள்ளைச்சாமி, கவிஞர் விஜய் ஆனந்த்,"யோசி நிறுவனர்"கவி முருகபாரதி " நமது அறிவியல்" எஸ். விஜிக்குமார், ம. ஜனார்த்தனன் ஆகியோர்களுக்கு சிறப்பு பாராட்டும் நடைபெற்றது.
வாசகர் வட்ட தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வரவேற்புரை வழங்க வாசகர் வட்ட துணைத் தலைவர் டாக்டர் ராஜ்குமார் அவர்கள் அறிமுகயுரையாற்றினார்கள் மாவட்ட மைய முதல் நிலை நூலகர் திருமதி கி.சசிகலா அவர்கள் தலைமையுரையாற்றினார்கள்
வாசகர் வட்ட செயற் குழு உறுப்பினர் கவிஞர் புதுகை புதல்வன் விழாவினை ஒருங்கிணைத்தார் வாசகர் வட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் மு.கீதா நன்றி கூறினார்கள்.
நன்றி: வாசகர் வட்டம்
0 கருத்துகள்