கவிக்கோ 84-ஆவது பிறந்த நாள் ஹைக்கூ கவிதைப் போட்டி

தமிழில் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளைப் பரவலாக அறிமுகம் செய்ததோடு, முதன்முதலில் நேரடியான தமிழ் ஹைக்கூ கவிதைகளை எழுதியவர் கவிக்கோ அப்துல்ரகுமான். அவரது 84-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த ஹைக்கூ கவிதைப் போட்டியைத் தூண்டில்' இதழோடு இணைந்து நடத்துகிறார் கவிஞர் அ.ஜ.இஷாக், வந்தவாசியைச் சேர்ந்த இளம் தொழிலதிபரான அ.ஜ.இஷாக். கவிக்கோவின் கவிதை ரசிகர் மட்டுமல்ல; முன் அறிவிப்பு' எனும் ஹைக்கூ நூலையும், மரணத்தின் நேர்காணல்' எனும் புதுக்கவிதை நூலையும் எழுதியுள்ளார்.

கவிக்கோ ஹைக்கூப் போட்டிக்கு நீங்கள் புதிதாக எழுதிய 10 ஹைக்கூ கவிதைகளை அனுப்பி வையுங்கள். சிறந்த ஹைக்கூவிற்கு முதல் பரிசு

ரூ.1,000/- இரண்டாவது பரிசு ரூ.750/- மூன்றாவது பரிசு

ரூ.250/- ஆறுதல் பரிசாக 10 கவிதைகளுக்கு ரூ.100/- மதிப்புள்ள நூல்களும் வழங்கப்படும்
கருத்துரையிடுக

0 கருத்துகள்