தமிழ் மரபு காவலர் விருது
தேதி: 31.01.2021
பேராசிரியர். கு. ஞானசம்பந்தன்
தமிழ் கல்வி மற்றும் கலை
தமிழ்த்துறைப் பேராசிரியராக இருக்கும் இவரது வழிகாட்டலில் இதுவரை 35 மாணவர்கள் “இளநிலை ஆய்வாளர்" பட்டங்களையும். 12 மாணவர்கள் "முனைவர் பட்டங்களையும் பெற்றுள்ளனர். பல்வேறு அச்சிதழ்களில் பல முக்கியக் கட்டுரைகளை எழுதியிருக்கும் இவர் சுமார் 15 மேற்பட்ட நூல்களையும் எழுதியிருக்கிறார்.
பல்வேறு தமிழ்த் தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் பல பங்களிப்புகளைச் செய்துவருகிறார். குறிப்பாக தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்று சிறப்பித்துவருபவர். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, 1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம். 2014 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய மகாகவி பாரதியார் விருது. பல்வேறு தமிழ்ச்சங்கங்கள் வழங்கிய உவகைப்புலவர்", "தமிழறிஞர்". “நகைச்சுவை அரசர்". "நகைச்சுவைத் தென்றல்". "இளைய கலைவாணர்". "சித்த பத்மஸ்ரீ போன்ற பட்டங்களும் பெற்றுள்ளார்.
0 கருத்துகள்