புத்தகங்களுடன் புத்தாண்டு வாசிப்பு சவால் 2021

 * வாசிப்பு சவாலில் இணையும் வாசகர்கள் 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை தாங்கள் எத்தனை தமிழ்ப் புத்தகங்களை வாசிக்க முடிவு செய்திருக்கிறார்களோ அந்த இலக்கை முகநூல் குழுவில்
(www.facebook.com/groups/838599272913969/) பதிவு செய்ய வேண்டும்.


* ஒவ்வொரு புத்தகத்தை வாசித்து முடித்ததும். அதை குழுவில் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக ஒருவரது இலக்கு 24 புத்தகங்கள் என்றால், முதல் புத்தகம் முடிந்ததும் வாசிப்பு சவால் 2021/1/24 என்று தலைப்பிட்டு புத்தகத்தின் பெயர், ஆசிரியர், பதிப்பகம் எத்தனை பக்கம், விலை போன்ற விபரங்களைப்
பதிவு செய்ய வேண்டும். கூடுமான வரை புத்தக அறிமுகம் ஒன்றை எழுதினால் மிக நன்று. இதில் சிறந்த அறிமுகங்கள் (www.bookday.co.in) இணைய இதழில் வெளியிடப்படும்.
 

* பங்கேற்கும் அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் வழங்கப்படும். பள்ளி மாணவர்கள். கல்லூரி மாணவர்கள்.
பொது என மூன்று பிரிவுகளில் வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பேருக்கு தலா ரூ.5000 த்துக்கு புத்தகப்பரிசு வழங்கப்படும் மேலும் 10 பேருக்கு ரூ.1000 ஆறுதல் பரிசு வழங்கப்படும். பங்கேற்போர் இணைப்பில் உள்ள கூகுல் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பவும்.

 

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்