நூல் அறிமுகம் ( 6.09.2020 கல்கிவாரஇதழ் )

புனைவுக் களங்களில் இது குறுங்கதைகள்குறுநாவல்களுக்கான நாற்காலிகள் கிடைத்திருக்கும் சந்தர்ப்பக் காலம்,நாராயணி கண்ணகி எழுதிய 'பிராந்தியம்குறுநாவல் திரை நாவல் எனும் அடைமொழியுடன் வந்துள்ளது.

இந்தத் திரை நாவலுக்கு மெட்டீரியலாக எடுத்துக்கொண்டிருக்கும் விஷயம் குறுநாவலுக்கானதே அல்ல பெரும் நாவலுக்கானது முடிவுகளற்று இறுதியானதே காணாமல் எரிந்துஎரித்து சமூகத்தை சாம்பல் மேடாக்கி வரும் அதிகார போதையர்கள் நடத்தும் யுத்தத்தின் ஒரு சோறை மட்டும் எடுத்துக் காட்டுகிறார்.

'பிராந்தியம்எனும் தலைப்பிற்கு வட்டாரம் என்ற பொருளையும் கொள்ளலாம். இப்போதிருக்கும் தலைமுறைக்கு அவ்வளவாகத் தெரியாது. இப்போது கல்வி நிலையங்கள் நடத்தி கல்வித் தந்தைகளாக மிளிரும் பலர்,இருபது ஆண்டுகளுக்கு முன்பு சாராய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திகளாக இருந்தவர்களே..

அரசியலோதேர்தலின் வெற்றி தோல்விகளோ,திருவிழாக்களோ போராட்டங்களோஅர்த்தால்களோ அந்தச் சக்கரவர்த்திகளின் கைகளில்தான் இருந்தன. பிராந்திக் கடைகளை ஏலம் எடுத்தவரே அதிகாரம் மிக்கவர் என்பதால்அதை யாருக்கும் விட்டுத்தராமல் கைப்பற்றியே வைத்திருப்பார்கள். புதியதாக ஒருவர் கைப்பற்ற முனையும் போது யுத்தம் மூண்டுவிடும்.        அந்த யுத்தமானதுசாதாரண மக்களைக் குழைத்துப்போடும் சாதிய மோதலாகவும்,மத மோதலாகவும் கூட ரூபம் கொள்ளும்.வலிமை மிகுந்த வியாபார சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாகத் திகழும் வெல்லமண்டி சுந்தரலிங்கத்தின் பிராந்தியத்தை தர்ம நியாயப்படி ஆட்சியைப் பறிக்க நுழையும் எம்.எல்.ஏ. சங்கரன் நடத்தும் யுத்தம் பிராந்தியம்.

இந்தக் குறுநாவலில் கதை முக்கியமன்றுகதை நடப்பதற்கான களம் கொந்தளிப்பானதுசங்கரனின் தந்தை இறந்த பிறகு சங்கரனின் தாய் உறவுகளால் ஏமாற்றப்படுவதும்ஆதரவின்றிக் கைவிடப்படுவதும்சங்கரன் வளர்ந்து பழிதீர்க்க நிமிர்வதும்அதன் பொருட்டுபுதியதாகக் கிளைத்த கட்சியில் சேர்ந்து எம்.எல்.ஏ.வாக ஆனதும்..ஆனால்அதிகாரம் என்பது எம்.எல்.ஏ. எனும் அலங்காரப் பதவியில் அல்லபிராந்தியத்திலுள்ள பிராந்திக் கடைகளைக் கைப்பற்றுவதே... அதற்கான தந்திரங்கள் கூட்டி ஏலமெடுத்தாலும்காலங்காலமாகக் கோலோச்சும் முதலாளிகளிடமிருந்து கைப்பற்ற முடிவதில்லை. அதிகாரம் சங்கரன் கைக்கு வருவதில்லை. அதிகாரிகள் கூட அவன் பக்கம் இல்லைஅவன் திரும்பும் பக்கமெல்லாம் குழிபறிக்கிறார்கள். தாண்டித் தாண்டி கால்களை முன்வைக்கிறான். புதிய புதிய பாதை உருவாக்குகிறான். இவர்களின் மோதலில் இறுதிக் கட்டமாக மத மோதல் உருவாகப் பார்க்கிறது. ரத்த நதியில் நீராடி வெல்பவர்களுக்கே அதிகாரம் எனும் நிலை உருவாகும் போதுமனித தர்மத்தைக் காக்க சங்கரன் எடுக்கும் இறுதி முடிவே பிராந்தியம்.

இது கல்கி நூற்றாண்டு விழா மினித் தொடர் போட்டியில் “முதல் பரிசு”
வென்ற கதை. சீரியஸான சின்ன நூல் எனலாம்.கருத்துரையிடுக

0 கருத்துகள்