இலக்கிய விருதுக்கு எழுத்தாளர் உத்தமசோழன் தேர்வு

மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டைசெங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை சார்பில் கடந்த 2002 ம் ஆண்டு முதல் இலக்கிய துறையில் இணையற்ற தமிழ் படைப்பாளரை பாராட்டி ரூ.50 ஆயிரம் ரொக்கமும் பொற்கிழியும்இலக்கிய விருதும் வழங்கி வந்தனர்.

கடந்தாண்டு முதல் ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டது. இதுவரை 

1.விசுவநாதன்

2.விக்ரமன்

3.கோவி வீரசேகரன்

4.ஜீவபாரதி

5.கோம் கோதண்டம்

6.மெர்வீன்

7.கவுதமநீலாம்பரன்

8.அய்க்கண்

9.வேணுகோபாலன் (புஷ்பா தங்கதுரை),

10.சுபாஷ் சந்திரபோஸ்

11ஜோதி லதா கிரிஜா

12. கர்ணன்

13. திருப்பூர் கிருஷ்ணன்

14.பிரபஞ்சன்

15.மேலாண்மை பொன்னுச்சாமி

16.பொன்னீலன்

17.கோ.பாரதி

18.கவிஞர் அமுதபாரதி

என பதினெட்டு படைப் பாளர்கள் செங்கமலத் தாயார் இலக்கிய விருதினை  

பெற்றுள்ளனர்.இந்நிலையில் 2020ம் ஆண்டுக்கான இலக்கிய விருதினை எழுத்தாளர்

உத்தமசோழன் பெறுகிறார்.இதற்கான விருது வழங்கும்விழா கல்லூரியின் தாளாளர்

டாக்டர் திவாகரன் தலைமையில் வரும் 26ம் தேதி சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார்

மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

 

ஆசிரியர் குறிப்பு :

உத்தமசோழன் இவரின் இயற்பெயர்: அ.செல்வராஜ் வாய்மேடு கிராமத்தில் அருணாச்சலம் –சௌந்தரவல்லி தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தமிழக அரசின் வருவாய்த்துறையில் வட்டாட்சியராக பணிபுரிந்தவர். பணியிலிருக்கு போதிருந்தே இவர் பல வார இதழ்களிலும்மாத இதழ்களிலும் சிறுகதைகளும்தொடர்கதைகளும் எழுதிருக்கிறார். பணிஓய்விற்குப் பிறகு 'கிழக்கு வாசல் உதயம்என்ற மாத இதழை நடத்தி வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்