சாதனை மாணவர் விருது 2021

சாதனை மாணவர் விருது 2021

ஒவ்வொரு ஆண்டும் இனிய நந்தவனம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வரும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக "சாதனை மாணவர்” என்ற விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். 2021 ஜனவரியில் நடைபெற விருக்கும் இனிய நந்தவனம் 24ஆம் ஆண்டு விழாவில் வழங்கப்பட இருக்கும் 'சாதனை மாணவர்கள்' விருதுக்காகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறோம்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் சமூக விழிப்புணர்வு எனப் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவர்கள் தக்க சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா நோய்த் தொற்றுக் காரணமாக (ZOOM) இணைய வழியாக மட்டுமே விழா நடத்தப்படுவதால் விருதுகள் அஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்படும்,

விருதுக்குத் தேர்வு பெறும் மாணவர்கள் சேவைக் கட்டணமாக இந்தியாவுக்குள் ரூ.1000 வெளிநாட்டுக்கு 100 அமெரிக்கடாலர் செலுத்த வேண்டும். விருதுக்குத் தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

ஏற்கனவே விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.11.2020

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

இனிய நந்தவனம் மாத இதழ்

எண்.17, பாய்க்காரத் தெரு, உறையூர், திருச்சி - 620 003. தமிழ்நாடு,

மின்னஞ்சல் : nandavanam10@gmail.com

மேலதிக விவரங்களுக்கு 9443284823
கருத்துரையிடுக

0 கருத்துகள்