ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 முடிவுகள்!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 முடிவுகள்!

ஜெயஸ்ரீ ராஜ் நினைவுச் சிறுகதைப் போட்டி, மங்கையர் மலரில் பதினைந்தாவது ஆண்டாக நடைபெறுகிறது. தன் மனைவி ஜெயஸ்ரீயின் பெயரில் இச்சிறுகதைப் போட்டியை நடத்தி வரும் திரு. ராஜகோபாலன் அவர்களுக்கு 'மங்கையர் மலர்' சார்பாக நன்றிகள் பல.

கடந்த வருடங்களைவிட இந்த வருடம் போட்டிக்கு வந்த கதைகள் மிக அதிகம் என்பதோடு, வித்தியாசமான கதைக் களங்களுடன், புதுமையான கருத்துகளைத் தாங்கி ஏராளமான கதைகள் வந்திருந்தன. ஆண்களும் கலந்து கொண்டது சிறப்பு. பெண்களுக்காக நடத்தும் போட்டி என்பதால் பெண்களைத் தியாகச் செம்மல்களாகவும் சேவைத் திலகங்களாகவும் மட்டுமே சித்தரிக்கும் கதைகளாக எழுதாமல், யதார்த்தமான கதைகளும், சமூகச் சிந்தனையைத் தூண்டும் கதைகளும், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்தும் கதைகளும் அதிக அளவில் வந்திருந்தன,

'மங்கையர் மலர்' பொறுப்பாசிரியர் ஜி. மீனாட்சி. எழுத்தாளர்கள் சுப்ர பாலன், ஜி.எஸ். எஸ்,, பத்மினி பட்டாபிராமன், கே.பாரதி ஆகியோர் நடுவர்களாக இருந்து முதற் கட்டமாக சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தந்தனர். அதிலிருந்து பரிசுக்குரிய கதைகளைப் பரிசீலித்து, தேர்ந்தெடுத்துத் தந்தார் எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம்.

முதல் பரிசு ரூ.8,000/- : அம்மாவும் இரண்டு வார லீவும்... - பானுமதி

இரண்டாம் பரிசு ரூ.5,000/- : புருஷி - எஸ்.தேவி கோகிலன்

மூன்றாம் பரிசு ரூ.3000/ ஜான்சி ராணி - ஜெயந்தி சுந்தரம்

(முதல் பரிசுக் கதை பக்கம் - 56)



கருத்துரையிடுக

0 கருத்துகள்