அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 - விரைவில் முடிவுகள்

 

அன்புள்ள வாசகர்களே,

கல்கி வார இதழ் அச்சிலிருந்து டிஜிட்டலுக்கு மாறினாலும் அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிக்கான வாசகர்களின் பங்கேற்பும் உற்சாகமும் சற்றும் குறையவே இல்லை.

ஆமாம். வந்து சேர்ந்த 815 சிறு கதைகளில் 707 707  சிறுகதைகள் - மெயில் வழியாகவே வந்தடைந்தது என்பதுதான் ஒரு மகிழ்ச்சியான மகிழ்ச்சியான திருப்பம்.

எனவே, தேர்வுக்கான பரிசீலனைக்கு இன்னும் காலம் தேவைப்படுவதால் அறிவித்த தேதியில் முடிவை அறிவிக்க இயலவில்லை. தற்போது முதல் கட்டத் தேர்வு முடிந்தது. இப்போது இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து நடக் கும் இறுதித் தேர்வுக்குப் பின் முடிவுகள் வெளியாகும். அது வரை கொஞ்சம் காத்திருங்களேன்.

-  கல்கி ஆசிரியர்




கருத்துரையிடுக

0 கருத்துகள்