கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு உலகத்தமிழ் அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டி 2021

 காக்கைச் சிறகினிலே மாத இதழ் முன்னெடுக்கும் ஆறாவது ஆண்டு கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப் பரிசு உலகத்தமிழ் அறிவியல் புனைவு சிறுகதைப் போட்டி 2021 வள்ளுவராண்டு 2052


🎯 2050களில் புவியில் தமிழர் வாழ்வு என்பது சிறுகதையின் மையக்கருவாக இருக்க வேண்டும்.
🎯 போட்டிக்கான கால எல்லை: 03.01.2021
🎯 போட்டி முடிவு: மார்ச்சு 2021இல் வெளிவரும்
🎯 காக்கைச் சிறகினிலே இதழின் தொடக்க நெறியாளராகப் பணியாற்றி மறைந்த இலக்கியவாதி கி பி அரவிந்தன் கனவின் மீதியில் எழும் புதிய தடமாக அமைகிறது இந்தப் போட்டி.
🎯 பாரதி கண்ட "சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!" என்ற கனவை நனவாக்கும் முயற்சிகளில் ஒன்று. உலகெங்கும் வியாபித்தவர்களாகி தொடரும் வாழ்வில் அடுத்தடுத்த தலைமுறையினர் எண்ணங்களைக் கொண்ட எழுத்துகளையும் படைப்புகளையும் ஊக்குவிக்கும் முகமாக இப்போட்டி அமைகிறது.
🎯  'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என வாழும் தமிழ் மக்களின் பூர்வீகம் - புலப்பெயர்வு அதன் நீட்சியென வாழத் தலைப்பட்ட வாழ்வினரது எதிர்காலக் கதைகளை பரவலாக எதிர்பார்க்கிறோம்.

நெறியாளர் மதிப்புக்குரிய பத்மநாப ஐயர் (இங்கிலாந்து)
நடுவர் குழு மதிப்புக்குரிய பேராசிரியர் சு. இராமசுப்பிரமணியன் (இந்தியா)
மதிப்புக்குரிய பேராசிரியர் ச. சுகிர்தராஜா (இங்கிலாந்து)
மதிப்புக்குரிய எழுத்தாளர் திரு ரஞ்சகுமார் (ஆஸ்திரேலியா)
மதிப்புக்குரிய பேராசிரியர் சு. ஸ்ரீதரன் (அமெரிக்கா)
மதிப்புக்குரிய எழுத்தாளர் திருமதி கீதா மதி (ஆஸ்திரேலியா)

முதல் பரிசு  : 10000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
இரண்டாவது பரிசு : 7500 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
மூன்றாவது பரிசு : 5000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
நான்கு ஆறுதல் பரிசுகள் : தலா 2000 இந்திய ரூபாய்கள் மற்றும் சான்றிதழ்
ஊக்கப் பரிசு : சான்றிதழ்

படைப்பு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: kiplan2021kaakkaicirakinile@gmail.com
படைப்பு அனுப்பவேண்டிய கடைசி நாள்: 03.01.2021






கருத்துரையிடுக

0 கருத்துகள்