அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் அரண் தமிழ் அறக்கட்டளை இணைந்து வழங்கும்
தமிழ் செம்மொழி
இலக்கியங்கள்
பரிசுப் போட்டிகள் 2020
அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும், அரண் தமிழ் அறக்கட்டளையும் இணைந்து 'செம்மொழி இலக்கியங்கள் - 41 நூல்களையும் 41 பேராசிரியர்களைக் கொண்டு 41 நாட்கள் தொடர்ந்து இணையவழி தொடர் சிறப்புக் கருத்தரங்கத்தை நடத்தி, உலகளவில் தமிழர்களின் அங்கீகாரம் மற்றும் பாராட்டுகளைப் பெற்றது மட்டுமின்றி, அந்நிகழ்வின் நோக்கம் அதன் இலக்கை எட்டியது போல், படித்தவர் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் சென்றடைந்தது.
ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து 120க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நடத்தி தமிழுக்குத் தொண்டு ஆற்றிவரும் இந்த அரண் குழுமத்தில் உள்ள அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழும் அரண் தமிழ் அறக்கட்டளையும், அதன் நிறுவனர் மற்றும் தலைவருமாகிய முனைவர் பிரியாகிருஷ்ணன் தலைமையில் சிறந்த பங்களிப்பைத் தமிழுக்காக ஆற்றி வருகின்றன.
பல்துறை ஆய்வறிஞராக விளங்கி வரும் முனைவர் பிரியாகிருஷ்ணன், அனைவருக்கும் பல்துறை ஆய்வுகளை கொண்டு சேர்க்க தொடர்ந்து பாடுபட்டு வரக்கூடியவர். முதன்முதலில் பல்துறை சார்ந்த மின்னிதழை தமிழில் கொண்டு வந்தவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்று.
இதுவரை அரண் குழுமத்திற்கு ஆதரவளித்து வரும் பேராசிரியப் பெருமக்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் துறைசார் வல்லுனர்களுக்கும் - நன்றியையும் பேரன்பையும் தெரிவித்துக் கொள்ளும் அரண் குழுமம், தற்போது அனைவருக்கும் ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்வகையில் தமிழ் வளர்ச்சி குறித்த அதன் அடுத்தகட்ட முயற்சியை மூன்றுவகையான போட்டிகள் மூலம் தொடர இருக்கின்றது.
தமிழ்மொழியை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் சீரிய முயற்சியை மைய நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள, கீழ்க்காணும் இப்போட்டிகளில் இணையும்படி அனைவரது பங்களிப்பையும் ஆதரவையும் அரண் குழுமம் நாடுகின்றது. நன்றி.
தொடர்புக்கு:
+91 7299587879, arantamiltrust@gmail.com
0 கருத்துகள்