ரா. கி. ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும்
“ரா. கி. ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020”

“ மாதம் ஒரு நூல் ” என உறுப்பினர்களுக்குச் சிறந்த நூல்களை அளித்து வரும் கோவை சிறுவாணி வாசகர் மையம், எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் அவர்கள் நினைவாக சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்துகிறது. 

இளம்தலைமுறையினரிடமிருந்தும், படைப்பாளிகளிட மிருந்தும் சிறந்த படைப்புகளை வரவேற்கிறது.

முதல் பரிசு - ரூ.10,000/-
இரண்டாம் பரிசு - ரூ.7,500/-
மூன்றாம் பரிசு -ரூ.5,000/-
மற்றும் 10 கதைகளுக்குத் தலா ரூ. 1000/- சிறப்புப் பரிசும் உண்டு.நிபந்தனைகள்:

* தமிழில் யூனிகோட் எழுத்துருவில்டைப் செய்து மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
* அனுப்பிவைப்பவரின் முழு விவரங்கள் (முகவரி, தொடர்பு எண், மின்னஞ்சல் முகவரி ) மற்றும் சிறுகதை இதுவரை எந்த வடிவிலும் வேறெங்கும் பிரசுரிக்கப்படவில்லை என்ற உறுதிமொழியுடன் அனுப்பவேண்டும்.
* சிறுகதைகள் வந்துசேர வேண்டியகடைசி நாள்: செப்டம்பர் 30, 2020.
* தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் பற்றிய விவரம் டிசம்பர் 2020-ல் வெளியிடப்படும்.
* தேசத்திற்கோ, எந்தவொரு பால், இன, மத, ஜாதி, மொழிக்கு எதிரான கருத்துகள் இடம் பெறக்கூடாது.
* கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களையும், புத்தகக் காப்புரிமை பதிப்பகத்தையும் சார்ந்தது.
* கதைகள் தொடர்பாக கடித, தொலைபேசித் தொடர்புகளைத் தவிர்க்கவும்.
* நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ரா.கி. ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 கதைகளுக்கான பரிசுகள் நாஞ்சில்நாடன் விருது-2021 விழாவில் வழங்கப்படும். அக்கதைகள் விழாவில் புத்தகமாகவும் வெளியிடப்படும். 
* நடுவர்களின் முடிவே இறுதியானது.

மின்னஞ்சல் - svmshortstories2020@gmail.com

கருத்துரையிடுக

0 கருத்துகள்