கடிதம் எழுதும் போட்டி

படித்துறை புத்தக அறக்கட்டளை நடத்தும்
கடிதம் எழுதும் போட்டி

போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் சுந்தரபுத்தன் எழுதிய கற்பனை கடிதங்கள் நூல் பரிசாக வழங்கப்படும். 

தேர்ந்தெடுக்கப்படும் 20 சிறந்த கடிதங்களுக்கு பரிதி பதிப்பகம் வெளியிட்ட ரூ.1000 மதிப்புள்ள ராசி அழகப்பன் கவிதைகள் மற்றும் அப்பா - நினைவும் புனைவும் நூல்கள் பரிசாக வழங்கப்படும்.

கடிதம் எழுதுபவர்கள் கவனத்திற்கு....
பிரிவு 1 : கற்பனை கடிதங்கள் : கடவுளுக்கு, காதலுக்கு, மண்ணுக்கு, மழைக்கு, மனசாட்சிக்கு, பிறவாத குழந்தைக்கு, இல்லாத காதலிக்கு என்று எழுதப்படும் கடிதங்கள்....

பிரிவு 2 : மனதின் மடல்கள் : உறவினர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, நண்பர்களுக்கு, அன்பைக்
கூறும் விதமாக, நன்றி கூறும் விதமாக, மன்னிப்பு கேட்கும் விதமாக உங்கள் வாழ்வில் உயிர்த்திருக்கும் ஒருவருக்கு எழுதப்படும் மடல்கள்.

> இந்த இரண்டு பிரிவுகளில் கடிதங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவர் ஒரு பிரிவில் மட்டுமே பங்கு பெற முடியும். ஒவ்வொரு பிரிவிலும் 10 சிறந்த கடிதங்கள் பரிசுக்குரியதாய் தேர்வு செய்யப்படும்.

> வேறு அமைப்புகள், இதழ்கள் நடத்திய போட்டிகளுக்கு அனுப்பிய கடிதங்களையும் இந்த போட்டிக்கு அனுப்பி வைக்கலாம்.

> பரிசுக்குரிய கடிதங்கள் padiththurai.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கடிதங்கள் அனுப்புவதற்கான கடைசி நாள் 30.08.2020

> தமிழின் தலைசிறந்த ஆளுமைகள் நடுவர்களாக இருந்து தேர்வு செய்யும் 20 கடிதங்களுக்கு நடுவர்களின் வாழ்த்து மடலுடன் பரிசு நூல்களும் செப்டம்பர் 15 ம் தேதி அனுப்பி வைக்கப்படும்.

கடிதங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
கணிணி அச்சில் எழுதும் கடிதங்களை padiththurai@gmail.com என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

கையெழுத்து பிரதிகள் அனுப்ப வேண்டிய முகவரி :
படித்துறை புத்தக அறக்கட்டளை, 128 பாரத கோயில் அருகில்,
கேணம்பட்டி அஞ்சல், ஜோலார்பேட்டை - 635851. திருப்பத்தூர் மாவட்டம்.

பேச -7200693200, புலனம் 88098908840கருத்துரையிடுக

0 கருத்துகள்