அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி - 2020

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020

படைப்பாளிகளே, நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சிறுகதைப் போட்டி அறிவிப்பு இதோ.....

முதல் பரிசு 10,000/-
இரண்டாம் பரிசு 17,500/- 
மூன்றாம் பரிசு 15,000/-

இந்தப் பரிசுகள் மட்டுமல்லாது, பிரசுரத்துக்குத் தேர்வாகும் ஒவ்வொரு கதையும் சன்மானம் பெறும், அறிமுக எழுத்தாளராக இருந்தால் சிறப்புப் பரிசு உண்டு. ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

விதிமுறைகள்:

* கல்கியில் நான்கு பக்கங்களுக்கு (1200 வார்த்தைகளுக்குள்) இருக்க வேண்டும். படைப்பு சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழிக் கடிதம் வேண்டும். அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்படமாட்டா.

முழு வெள்ளைத்தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும். கதையை தபாலிலோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பலாம்.

* மின்னஞ்சலில் கதைகளை அனுப்புவோர் Subject ஆக 'சிறுகதைப் போட்டி 2020' எனக் குறிப்பிட்டு editorkalki@kalkiweekly.com-க்கு அனுப்பவேண்டும். கதையை மின்னஞ்சலின் இணைப்பாக அனுப்ப வேண்டும், எழுத்தாளரின் முழு முகவரி, போன் எண் குறிப்பிடப்பட வேண்டும்.

* போட்டிக்கு அனுப்பும் கதையைத் திருப்பி அனுப்ப இயலாது. கதையின் பிரதியை நீங்கள் வைத்துக் கொள்ளவும், முடிவுகள் வெளியாகும் வரை வேறு இதழுக்கோ இனையதளத்துக்கோ, வலைப்பதிவுகளுக்கோ, இதர போட்டிகளுக்கோ அனுப்பக்கூடாது.

* பரிசுக்குரிய கதைகளை, நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும், கல்கி ஆசிரியரின் தீர்ப்பே இறுதியானது.

*முடிவு வெளியாகும் வரை, எவ்விதக் கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, மின்னஞ்சல் விசாரிப்புகளோ கூடாது.

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020 என்று உறையின் மேல் தவறாமல் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய முகவரி : ஆசிரியர், கல்கி, கல்கி பில்டிங்க்ஸ், 47-NP. ஜவாஹர்லால் நேரு சாலை,
ஈக்காடுதாங்கல், சென்னை - 32.

கதைகள் வந்து சேரக் கடைசித் தேதி: ஆகஸ்ட் 31, 2020, - போட்டி முடிவும், முதல் பரிசுக் கதையும் அக்டோபர் மாத கல்கி மின் இதழில் (www.kalkionline.com) வெளியாகும்.
கருத்துரையிடுக

1 கருத்துகள்