புத்தக விமர்சன போட்டி
தொடர்ந்து வாசிப்பவரா நீங்கள்?
ஒரு புத்தகம் உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறதா?
அந்தப் புத்தகத்தை உலகத்தோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது Few Minutes Please.
“நான் வியந்த புத்தகம் – விமர்சனப் போட்டி”
உங்களுக்குப் பிடித்த புத்தகத்தின் விமர்சனத்தைக் காணொளியாகவோ அல்லது குரல் பதிவாகவோ எங்களுக்கு அனுப்புங்கள். தேர்ந்தெடுக்கப்படும் விமர்சனங்களுக்கு சிறப்புப் பரிசுகள் காத்திருக்கிறது.
*போட்டி விதிமுறைகள்:*
1. ஒருவர் அதிகபட்சமாக 5 விமர்சனங்களை அனுப்பலாம்.
2. நீங்கள் அனுப்பும் விமர்சனம் காணொளி வடிவிலோ அல்லது குரல் பதிவாகவோ (Video or Audio) அதிக பட்சமாக 5 நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. தமிழ், ஆங்கிலம் என இரண்டு பிரிவுகளிலும் போட்டி நடைபெறும். இரண்டு பிரிவுகளுக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படும்.
4. உங்கள் விமர்சனங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி fewminutesplease@gmail.com
5. உங்கள் பதிவுகளை அனுப்பும் பொழுது மின்னஞ்சலில் உங்கள் பெயர், ஊர் மற்றும் புலன எண்ணை (Whatsapp number) தெளிவாகக் குறிப்பிடவும்.
6. உங்கள் படைப்பு தேர்வாகும் பட்சத்தில் அதனை எங்கள் சேனலில் பதிவேற்ற ஆட்சேபனை இல்லை என்ற உறுதிமொழியும் அனுப்ப வேண்டும். உறுதிமொழி இல்லாவிட்டால் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்பதாகவே எடுத்துக்கொள்ளப்படும்.
7. விமர்சனங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் – 30 (30.06.2020).
8. வாசிப்பதற்கு வயது ஒரு தடை இல்லை என்பதால் இப்போட்டிக்கு வயது வரம்பு கிடையாது. புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதே எமது பிரதான கொள்கை.
9. நீங்கள வாசித்த புத்தகம் எம்மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் விமர்சம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் இருக்க வேண்டும்.
10. ஆங்கில, புத்தகங்களையும் தமிழில் விமர்சிக்கலாம். தமிழ் புத்தகங்களையும் ஆங்கிலத்தில் விமர்சிக்கலாம்.
11. நீங்கள் வாசித்த புத்தகம் எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம். அச்சு புத்தகம், மின் புத்தகம் அல்லது பிரதிலிபி போன்ற தளங்களில் படித்த கதைகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கண்டிப்பாக அந்த கதையின் தலைப்பு (அ) நூலின் தலைப்பு, ஆசிரியர் பெயர் மற்றும் அது எந்த வடிவிலான புத்தகம் என்பதை குறிப்பிட வேண்டும்.
போட்டியில் தமிழ், ஆங்கிலம் என இரு பிரிவுகளிலும் வெற்றிபெறும் முதல் 8 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிறப்பான 50 விமர்சனங்கள் எங்கள் Few Minutes Please வலைதளத்தில் பதிவேற்றப்படும் (www.youtube.com/fewminutesplease).
போட்டி குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் fewminutesplease@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.

0 கருத்துகள்