தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்.,நினைவு சிறுகதை போட்டி -2020

வாசக எழுத்தாளர்களே

உங்கள் திறமைக்கு ஒரு சவால்! 'தினமலர்' நிறுவனர், அமரர் டி.வி.ராமசுப்பையர் நினைவு சிறுகதை போட்டி, ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். வளரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இப்போட்டி, 33வது ஆண்டாக, இவ்வாண்டும் உண்டு.

முதல் பரிசு: ரூ.20,000
இரண்டாவது பரிசு: ரூ.15,000
மூன்றாவது பரிசு: ரூ. 1000
ஆறுதல் பரிசு 11 சிறுகதைகளுக்கு தலா: ரூ.5,000

 போட்டிக்கான நிபந்தனைகள்:

1. சிறுகதை, உங்களது சொந்த கற்பனையாக, இதுவரை வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும்.
2. மொழிபெயர்ப்பு சிறுகதையாக இருக்கக் கூடாது.
3. சிறுகதையை தட்டச்சு அல்லது டிடி.பி., செய்து அனுப்ப வேண்டும். ஒவ்வொரு தானின் பின்புறமும், அனுப்புபவரின் முகவரியை கண்டிப்பாக எழுத வேண்டும்.
4. தேர்வு பெறாத சிறுகதைகளை, திருப்பி அனுப்ப இயலாது, எனவே. தபால் தலை இணைக்காமல், சிறுகதையை பிரதி எடுத்து வைத்து அனுப்பவும்.
5. போட்டிக்கான கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஜூன் 30. 2020. போட்டி முடிவுகள் செப்., 27. 2020 "தினமலர் - வாரமலர் இதழில் வெளியாகும். நடுவர் குழுவின் தீர்ப்புக்கு பின், ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
6. பிரபலமான எழுத்தாளர்களும், ஏற்கனவே இச்சிறுகதை போட்டியில் முதல் மூன்று பரிசு பெற்ற எழுத்தாளர்களும், போட்டியில் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.

குறிப்பு:  ஞாயிறு தோறும் வெளிவரும் வாரமலரில் முகவரி கூப்பன் பெறலாம். சிறுகதைகளை அனுப்பும் போது, முகவரி கூப்பனை பயன்படுத்தி அனுப்புங்கள்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்