பிராந்தியம் (திரை நாவல் )
நூல் ஆசிரியர் : நாராயணி கண்ணகி
வெளியீடு : தேநீர் பதிப்பகம்
“இந்த நாவல் 1999 அமரர் கல்கி நூற்றாண்டு விழா மினித்தொடர் போட்டியில்
முதல் பரிசு வென்றது.கதைக்களமும் அதே காலக்கட்டம்தான்.டாஸ்மாக் வருவதற்கு முன்
சாராயம் விற்கும் தொழில் தனியார் முதலாளிகளிடம் இருந்தது.அக்காலத்தில் நடந்த கட்டப்
பஞ்சயாத்து அதன் கூடவே பயணிக்கும் முன் விரோதங்கள் மற்றும் வியாபாரம் மற்றும்
வியாபாரிகள் சமுதாயத்திற்கு செய்யும் நன்மை தீமை செயல்களை அருமையாக
காட்சிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.முந்தைய காலத்தில் நடந்த சம்பவங்களாக கதைக்களம்
இருந்தாலும் அதிலுள்ள விஷயங்களும் குறிப்புகளும் எக்காலத்திற்கும் பொருந்தும் உண்மைகள்.
இந்நாவலில் வில்லன் கதாநாயகன் இருவருக்குமே காத்தலுக்கும் அழித்தலுக்கும் பெயர் வாங்கிய
ஈசனின் பெயரையே வைத்திருக்கிறார் நாவலாசிரியர் இந்த விஷயம் அவருக்கு தெரியாமலே
அமைந்திருக்குமென்று நம்புகிறேன் .இந்த கதைக்களத்தை சற்று மாற்றியமைத்தால் நல்லதொரு
திரைப்படமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
“காலம் மாறினாலும் மாறாதது வியாபாரம்.
வியாபாரம் என்கிற கொள்ளை , வியாபாரம் என்கிற மோசடி, வியாபாரம் என்கிற
மாஜிக். வியாபாரிகள் இந்நாட்டின் மன்னர்கள்”
இந்த வரிகளே சான்றளிக்கிறது இதுவொரு தரமான திரை நாவல் என்று.
0 கருத்துகள்