செத்தல் மீன்


பெயர்:
சிலேப்பி கெண்டை ,கருமுரல் என்று ஒரு சிலர்  கூறினாலும் அதிகப்படியான  மீனவர்கள் “செத்தல்” என்றே கூறுகிறார்கள்.பார்ப்பதற்கு குளத்து மீனைப்போல இருக்கும் ஆனால் இது கடலில் மட்டுமே வாழக்கூடிய மீன். 

செத்தல் மீன்
தன்மை:
தண்ணீரிலிருந்து வெளியேறிய பிறகு ஒரு மணிநேரமாவது சுவாசித்து உயிரோடு இருக்கும்.சுவாசித்தலை நிறுத்திய பிறகு ஐந்து மணிநேரம்வரை கெடாமல் இருக்கும். இந்த மீன்கள் பெரும்பாலும் கரைப்பகுதிகளில்தான் அதிகமாக வாழும் ஆழ்கடலில்  காண்பது சற்று அரிதுதான் .மற்ற மீன்களைப் போல நிறைய மீன்களை பிடிக்க முடியாது குறைவான மீன்களே கிடைக்கும்.

இனப்பெருக்கம்:
இனப்பெருக்கம் : 
முட்டையிட்டு பாசியில் அல்லது சிறுகுச்சிகளில் ஒட்டி வைத்துவிடும்.               நான்கைந்து நாட்களுக்கு பிறகு சிறுசிறு பள்ளங்கள் பறித்து முட்டைகளை அதில் வைத்து அடைகாக்கும்.குஞ்சுகள் வெளிவந்து ஓரளவு பெரிதாகும்வரை தாய் மீனும் தகப்பன் மீனும் குஞ்சுகளை பாதுக்காக்கும் பணியில் இருக்கும்.சிலேப்பி மீனின் இனபெருக்கமும் செத்தல் மீனின் இனப்பெருக்கமும் ஏறக்குறையே ஒரே மாதிரியே இருக்கிறது.              இரு மீன்களின் உடலமைப்பும் நிறமும் ஒரே மாதிரி இருப்பதால் இரு மீன்களும் ஒரே இனத்தை சார்ந்ததாக இருக்கலாம்.


செத்தல் மீன் முட்டை


சமையல்:
இந்த மீனை தோலுரித்து சுத்த செய்ய வேண்டும்.குழம்பு வைப்பதைவிட வறுத்தால் சுவையாக இருக்கும்.முட்கள் கடினமாக இருக்கும் என்பதால் பெரியவர்களின் உதவியில்லாமல் குழந்தைகளுக்கு கொடுக்காதீர்கள்.

செத்தல் மீன் - சுத்தம் செய்த பிறகு

கருத்துரையிடுக

0 கருத்துகள்