பிரதிலிபி நடத்தும் தொடர்கதை போட்டி

வணக்கம்,

லைவ் சீரியல் போட்டிக்கு வரவேற்கிறோம். தொடர்கதைகளுக்காக பிரதிலிபி நடத்தும் முதல் போட்டி இது. தொடர்கதை எழுதிவருபவர்கள், எழுத விருப்பமிருப்பவர்கள் பங்கேற்கலாம். ஆனால் லைவ் சீரியலில் மட்டுமே இதனை எழுத இயலும். அதாவது நீங்கள் எழுதப்போகும் படைப்பு ஆயிரக்கணக்கான வாசகர்கள் முன் லைவ் ஆக இருக்கும். அதேபோல் அடுத்தடுத்த பாகங்கள் எப்போது பதிப்பிக்கப்படும் என்பதையும் வாசகர்கள் பார்க்க இயலும்.

இந்த போட்டி உங்கள் தொடர்கதை எழுதும் திறமையை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல், தொடர்ச்சியாக குறிப்பிட்ட நேரத்தில் எழுதி வெளியிடும் பழக்கத்தையும் மேம்படுத்தும்!



போட்டி விதிமுறைகள் :

1. ஒருவர் எத்தனை தொடர்கதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அனைத்தையும் கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள் முடிக்கவேண்டும். தொடரை முடிக்கவேண்டிய கடைசி நாள் - 10/05/2020. இதற்கு முன்னரும் தொடரை முடிக்கலாம்.

2. தொடர்கதையில் குறைந்தபட்சம் 5 பாகங்கள் எழுதவேண்டும். அதிகபட்சம் எத்தனை பாகங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம்.

3. ஒவ்வொரு பாகத்திலும் குறைந்தபட்சம் 1000 வார்த்தைகள் இருக்கவேண்டும். (அதற்கு கீழ் இருந்தால், அந்தப் படைப்பு போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது). எனவே லைவ் சீரியலில் நாட்கள் தேர்ந்தெடுக்கும்போது யோசித்து தேர்ந்தெடுக்கவும்.

4. ஏற்கனவே எழுதிவரும் லைவ் சீரியல் / தொடர்கதைகளை இந்த போட்டியில் சேர்க்க இயலாது. 'எழுத' பக்கத்திற்கு சென்று புதிய தொடரை தொடங்கி அதனை லைவ் சீரியலில் சேர்க்க வேண்டும். எப்படி சேர்க்க வேண்டும் என்பதை பார்க்க - இங்கே சொடுக்கவும்

5. இது எழுத்தில் ஒரு ஒழுங்கை கொண்டுவர உதவும் போட்டி. அதாவது, உங்கள் தொடரின் ஒவ்வொரு பாகத்தையும் நீங்கள் முன்னரே ஒப்புக் கொண்ட தேதியில் வெளியிடவேண்டும். தேதிகளை நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள்.

6. 3 முறை எழுத்தாளர் ஒப்புக் கொண்ட தேதியில் படைப்பை வெளியிட இயலவில்லையெனில், அவரது படைப்பு லைவ் சீரியல் பட்டியலில் இருந்து தானாக நீங்கிவிடும்.

7. ஒப்புக் கொண்ட நேரத்தில் பதிப்பித்துவந்தால், உங்கள் படைப்பு தினமும் ஆயிரக்கணக்கானோர் வாசிக்கும் பிரதிலிபி முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும்.

8. முதல் பாகம் பதிப்பிக்கும்போது, பிரிவுகளில் 'லைவ் சீரியல்' எனும் பிரிவை தேர்ந்தெடுக்கவேண்டும். அதைத் தேர்ந்தெடுக்கும் படைப்புகள் படைப்பு போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். (மீதி இரண்டு பிரிவுகள் படைப்புக்கு உகந்த பிரிவாக தேர்ந்தெடுக்கவேண்டும்)

9. கைபேசி செயலியில் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க இயலும்.

எப்படி பங்கேற்பது?

போட்டியில் படைப்பை எப்படி சேர்க்க வேண்டும் என்பதை பார்க்க  - இங்கே சொடுக்கவும்.

கடைசித் தேதி :

நீங்கள் தொடங்கிய லைவ் சீரியலை 45 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். தொடர்கதை முடியவேண்டிய கடைசித் தேதி : 10/05/2020.

போட்டி முடிவுகள் அறிவிக்கும் தேதி பின்னரே (போட்டிக்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையை பொறுத்து) அறிவிக்கப்படும்.

போட்டியில் பங்கேற்பதன் நன்மைகள் :

நீங்கள் எழுதும் படைப்புகள் தினமும் பிரதிலிபியின் முகப்பு பக்கத்தில் காண்பிக்கப்படும்.

லைவ் சீரியல் பிரதிலிபியில் அதிக வாசகர்களால் விரும்பப்படும் வசதி. போட்டியில் பங்கேற்றால் நிச்சயம் நிறைய வாசகர்களை சென்றடைவீர்கள்.

போட்டியில் பங்கேற்கும் அனைத்து எழுத்தாளர்களும் மின் சான்றிதழ் பெறுவார்கள்.

பரிசுத்தொகை:

முதல் மூன்று படைப்புகளுக்கு தலா 5000ரூ பரிசுத்தொகையாக வழங்கப்படும். மூன்றுமே நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும்.

முதல் 10 படைப்பாளிகளுக்கு பிரதிலிபியின் பிரத்யேக டீஷர்ட் (Tshirt) வழங்கப்படும்.

படைப்புத்தேர்வில் பிரதிலிபியின் முடிவே இறுதியானது.

ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் tamil@pratilipi.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும் அல்லது 9206706899 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.

வெற்றியடைய வாழ்த்துக்கள்! நன்றி

கருத்துரையிடுக

0 கருத்துகள்