தேநீரில் உப்பு

ஒரு கோப்பையிலுள்ள சொட்டுகளை விட அதிகமான விடயங்களை
கதையிலுள் உள்ளடக்கியிருக்கிறார் கதாசிரியர்.
தேநீரில் உப்பு இல்லை தேநீரில் அரசியல்,பேராசை,சத்தியத்தையும் உள்ளடக்கி
லாவகமாக கதையை நகர்த்தியிருக்கிறார். இக்கதையில் குறிப்பிடுவது போல
உணவில் கோழி,ஆடு என்று ஏதோ ஒன்றை தவிர்த்து இன்றும் வாழ்கிறார்கள்.என்ன
காரணமென்று கேட்டால் இரண்டு மூன்று தலைமுறைகளாக சாப்பிடுவதில்லை என்று முற்றுப்புள்ளி
வைப்பார்கள் சிலர்.ஒருசிலர் தெய்வ குத்தமேன்று ஒரே வார்த்தையிலும் முடிக்கிறார்கள்.
"தேநீர்" கவிதைகளில் இயற்கை அழகியியலை அதிகமாக  பாடியிருப்பார்கள் இவர்
குடும்ப அரசியல் உலக அரசியல்வரை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல
கதையில் கூறியிருக்கிறார். ஆண்டு 2019 தீபாவளி விருந்தாக வெளிவந்த கல்கி சிறப்பு மலரில்
சிறப்புக்கதையாக வெளிவந்த எழுத்தாளர் நாராயணி கண்ணகி எழுதிய “தேநீரில்
உப்பு”என்ற சிறுகதை சிறப்பு..மிகச் சிறப்பு.படைப்பாளர் - நாராயணி கண்ணகி

நன்றி : கல்கி

கருத்துரையிடுக

0 கருத்துகள்