மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டி

 'கானல் அமீரகம்" வழங்கும் 

மாபெரும் உலகளாவிய 

சிறுகதைப் போட்டி


* இந்தச் சிறுகதைப் போட்டியில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் 


* உங்களது கதை இதற்கு முன்பு எங்கும் பிரசரிக்கப்படாததாக அல்லது வேறு எந்த இடத்திற்கும் அனுப்பப்படாததாக, மொழி மாற்றம் செய்யப்படாததாக இந்தப் போட்டிக்காகவே அனுப்பப்படுகின்ற கதையாக இருக்க வேண்டும். இதற்கான உறுதிமொழியை சிறுகதையோடு சேர்த்து அனுப்ப வேண்டும்.


* தமிழில் ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாததாக உங்கள் கதைகள் இருக்க வேண்டும்.


* ஒருவர் அதிகபட்சமாக இரண்டு கதைகள் வரை அனுப்பலாம்.


* யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்ட கதைகள் மட்டுமே தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். 


* உங்கள் கதைகள் எந்த வகைமையைச் சேர்ந்ததாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


* போட்டியாளர்கள் சிறுகதையோடு தங்கள் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.


* முதல் பரிசாக 10,000 இந்திய ரூபாய்களும், இரண்டாம் பரிசாக 5000 இந்திய ரூபாய்களும்,  மூன்றாம் பரிசாக 3000 இந்திய ரூபாய்களும் வழங்கப்பட இருக்கின்றன 


* இந்தப் பரிசுகள் போக,  தேர்ந்தெடுக்கப்படும் 12 சிறுகதைகளுக்குத் தலா 1000 இந்திய ரூபாய்கள் பரிசாக வழங்கப்பட இருக்கின்றன.


* மொத்தம் 15 பரிசுகள் இந்தச் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்காக வழங்கப்படும். 15 பரிசுகளோடு, வேறு சில அதிரடிப் பரிசுகளும் பங்கு பெறுபவர்களுக்காகக் காத்திருக்கின்றன.


* உங்கள் கதைகளை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.


* போட்டிக்கான இறுதி நாள் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய நேரம் நள்ளிரவு 12 மணி.


இன்றைய தேதி : 08.07.2024


கருத்துரையிடுக

0 கருத்துகள்