விஜயா வாசகர் வட்டம் விருதுகள்
கோவை விஜயா வாசகர் வட்டத்தின் ஜெயகாந்தன் விருதுக்கு கவிஞர்
விக்ரமாதித்யன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கோவை, விஜயா வாசகர் வட்டம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக உலக புத்தக தினத்தன்று
விருதுகள் வழங்கப்படுகின்றன.
நடப்பு ஆண்டுக்கான விருதாளர்கள் தேர்வு அண்மையில் நடைபெற்றது. இதில் விஜயா பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதம், சென்னை வி.கிருஷ்ணகுமார், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோர் பங்கேற்று விருதாளர்களைத் தேர்வு செய்தனர். இதில் ஜெயகாந்தன் விருதுக்கு கவிஞர் விக்ரமாதித்யன், புதுமைப்பித்தன் விருதுக்கு எழுத்தாளர் சுதேசமித்திரன், கவிஞர் மீரா விருதுக்கு எழுத்தாளர் ராம் தங்கம், சிறந்த நூலகருக்கான சக்தி வை கோ விருது திருச்சியைச் சேர்ந்த அரசு நூலகர் சிவகுமார், சிறந்த விற்பனையாளருக்கான வானதி விருதுக்கு திருப்பூர் எஸ்பிஎஸ் ஏஜென்சிஸ் சுதாகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான விருதுகள் வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்