

சத்தக்காரன்
பெயர்:
தரையில் வாழும் உயிரினங்கள் போல வலையில் அகப்பட்டவுடன் சத்தமிடுவதால் இந்த மீனை சத்தக்காரன் என்று அழைக்கிறார்கள்.இவ்வகை
மீன்களை மீனவர்கள் சமைத்து சாப்பிடமாட்டார்கள்.வலையில் பிடிப்பட்டாலும் கடலிலேயே
விட்டுவிடுவார்கள்.
இருப்பிடம்:
ஓரா பாசிகளிலும் மற்றும் வட்டார தாழைகளிலும் அதிகமாக காணப்படும்.
சிறுசிறு பள்ளங்கள் தோண்டி படுத்துக்கொள்ளும். ஆழக்கடலிலும் கரைப்பகுதிகளிலும்
பரவலாக வாழும் தன்மையுடையது.தண்ணீருக்குள் தரைப்பகுதியில் படுத்தே இருப்பதால்
அரிவலையில் அதிகமாக பிடிப்படும்.
இரை மற்றும் இனப்பெருக்கம் :
பெரும்பாலும் சின்னச் சின்ன பூச்சிகளையும், கூனி இறாலையும்
(குஞ்சு இறால்) இரையாக்கிக்கொள்ளும். முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன
சத்தக்காரன் மீன்கள்.
0 கருத்துகள்