கலையன்னையார் நினைவு விழா பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டி - 2021

கலையன்னையார் டாக்டர் இராதா தியாகராசன் அவர்கள் நினைவைப்

போற்றும் வகையில் பொதுமக்களுக்கான சிறுகதைப் போட்டி நிகழும்.

விதிமுறைகள்:

1) சிறுகதையின் மையக் கருவாக, "பெண்ணியம்' அமைதல் வேண்டும்.

2) 5 பக்கங்களுக்கு மிகாமல் தெளிவான கையெழுத்தில் அமைந்திருக்க வேண்டும். 

3) பங்குபெறுவோர் மாணவராக இருப்பின், முழு விபரம் இடம் பெற வேண்டும்.

4) பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் தொடர்பு எண்ணைக் குறிப்பிட வேண்டும்.

5) அனுப்பப் பெறும் சிறுகதை எவ்வித ஊடகத்திலும் இதுவரை வெளிவரவில்லை என்ற சான்றிதழ் அனுப்பப் பெற வேண்டும்.

6) எவ்வித எதிர்நிலைக் கருத்தும் இடம்பெறா வண்ணம் அமையும் சிறுகதைகள் 05.03.2021 வெள்ளிக்கிழமை-க்குள் முதல்வர், தியாகராசர் கல்லூரி, 139-140 காமராசர் சாலை. மதுரை-9. முகவரியில் அஞ்சல்/கூரியர் மூலமாகவோ, நேரிலோ கிடைக்குமாறு செய்யலாம்.

7) உறையின் மேல் "கலையன்னையார் நினைவுச் சிறுகதைப் போட்டி" என்று எழுதி அனுப்பவும்.

8) முதல் பரிசு ரூ.7000/- இரண்டாம் பரிசு ரூ.5000/- மூன்றாம் பரிசு ரூ.3000/-

9) கல்லூரியின் முடிவே இறுதியானது.

10) பரிசுகள் 08.03.2021 அன்று மகளிர் தின விழாவில் வழங்கப்பெறும்.




கருத்துரையிடுக

0 கருத்துகள்